முடியில் அடிக்கும் துர்நாற்றத்தை போக்கணுமா..? வழி இதோ இருக்கே!

Default Image

எப்போதுமே உங்களின் துர்நாற்றம் அடிக்கிறதா.? தலைக்குளித்த ஓரிரு நாட்களிலே மீண்டும் அழுக்குகள் சேர்ந்து கொள்கிறதா? இந்த பிரச்சினை நம்மில் பலருக்கும் இயல்பாகவே இருக்கிறது. இந்த பிரச்சினையை எளிதில் தீர்க்க சில எளிய வழிகள் உள்ளன.

அதாவது முடியில் உள்ள அழுக்குகளை போக்கி, எப்போதுமே துர்நாற்றம் வீசப்படி பார்த்து கொள்ள இந்த 4 டிப்ஸ் போதும். இந்த குறிப்புகளை வாரம் ஒரு முறை செய்து வந்தாலே எளிதில் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.

டிப்ஸ் #1
தலையில் சேர்ந்துள்ள அழுக்குகளை முழுவதுமாக விரட்டி துர்நாற்றம் வராமல் பார்த்து கொள்ள 2 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை 1 கப் வெது வெதுப்பான நீரில் கலந்து தலைக்கு தடவவும். 15 நிமிடம் சென்று தலையை அலச வேண்டும். இதனை வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் துர்நாற்றம் விலகும்.

டிப்ஸ் #2
4 பூண்டு பற்களை எடுத்து கொண்டு அதனை நசுக்கி கொள்ளவும். பிறகு கடாயில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து மிதமான சூட்டில் சூடு செய்யவும். இந்நிலையில் நசுக்கிய பூண்டை இதில் சேர்த்து சிறிது நிமிடத்திற்கு பின் இறக்கி கொள்ளவும். ஆறிய பின் வடிகட்டி தலைக்கு தேய்த்து குளித்து வரலாம். மிக விரைவில் அழுக்குகளை போக்கி துர்நாற்றத்தை நீக்கும்.

டிப்ஸ் #3
2 ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை எடுத்து கொண்டு 1 கப் நீரில் கலந்து கொள்ளவும். பிறகு இதனை தலைக்கு தடவி 15 நிமிடம் சென்று குளிக்கவும். வாரத்திற்கு இதே போன்று 2 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

டிப்ஸ் #4
1 ஸ்பூன் வேப்ப எண்ணெய்யை 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வரலாம். இது மிக விரைவில் முடியில் உள்ள அழுக்குகளை நீக்கி துர்நாற்றத்தை தவிர்க்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்