புருவங்களை இயற்கை முறையில் நேர்த்தியானதாக-அழகானதாக மாற்றுவது எப்படி?

Default Image

பெண்கள் பலருக்கும் அடர்த்தியான, நேர்த்தியான புருவங்களை பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும்; ஆனால் அதை எப்படி பெறுவது என்று தெரியாமல் கண்டதையும் முயற்சித்து இருக்கும் அழகையும் தொலைத்தவர் பலர். இப்படி புருவங்களின் நேர்த்தியை கூட்ட விரும்பும் பெண்களுக்கு உதவவே இந்த பதிப்பு.

இந்த பதிப்பில் புருவங்களை இயற்கை முறையில், நேர்த்தியானதாக, அடர்த்தியானதாக – அழகானதாக மாற்றுவது எப்படி என்பது குறித்து படித்து அறியலாம்.

அவசியம் என்ன?

முகம் என்ன தான் அழகானதாக திகழ்ந்தாலும், அதை ஒளி கொண்டதாக மாற்றுவது கண்கள் தான்; அந்த கண்கள் மற்றும் அதை சுற்றிய உறுப்புகள் சரியான அமைப்பில் முகத்தில் அமைய வேண்டியது அவசியம். அந்த வகையில் கண்கலின் விலாசமாக திகழும் புருவங்கள் நேர்த்தியானதாக திகழ வேண்டியது அவசியம்.

சரியான பென்சில்

புருவத்தை வரைந்து கொள்ளும் பழக்கம் உள்ள நபர்கள், அதற்கு ஏற்ற சரியான வகை பென்சிலை பயன்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

மேலும் புருவத்திற்கு பயன்படுத்தும் கண்மை, பிரஷ் போன்றவை அதிக வேதித்தன்மை இல்லாதவையாக இருத்தல் வேண்டும்.

திரெட்டிங்

காடுபோல் புருவ முடி அடர்ந்து வளர்ந்திருந்தால், அதை அழகானதாக மாற்ற நேர்த்தியான முறையில்  திரெட்டிங் செய்து கொள்ளலாம். ஆனால், சரியாக இருக்கும் புருவத்தை திரெட்டிங் செய்வது நன்றன்று.

இயற்கையை பின்பற்றுவோம்

இயற்கையாக நீங்கள் பிறந்தது முதல் புருவம் எப்படி இருந்ததோ அதை அப்படியே வாழ்நாள் முடியும் வரை வைத்துக் கொள்வது நன்று; ஏனெனில் உங்கள் உருவத்தை படைக்கையில், அதற்கு எது பொருந்தும் என பார்த்து தான் அனைத்து உறுப்புகளுமே அமைக்கப்பட்டிருக்கும்.

ஆகையால், இயற்கையாக எக்குறையும் இல்லாமல் அமைந்த உடல் பாகங்களையோ, உடல் அமைப்புகளையோ மாற்ற முயலாது இருப்பது நன்று.  

வில் போன்ற புருவம்!

புருவத்தை வில் போன்றதாக அமைத்தால், அது முகத்திற்கு மேலும் அழகு தரும்; ஆனால், அப்படி அமைப்பது தங்கள் முக அமைப்பிற்கு பொருந்துமா என ஆராய்ந்து அறிந்து அதை அமைத்துக் கொள்ளல் வேண்டும்.

புருவ வளர்ச்சி

புருவத்தில் முடி வளர்ச்சி குறைவாக இருந்தால், அதை அதிகரிக்க இயற்கை முறையிலான வழிகளை பின்பற்றுங்கள்; தரமான பென்சிலால் புருவத்தை வரைந்து விடுங்கள்.

புருவ பகுதியில் இரத்த ஓட்டம் சரியானதாக இருந்தால் முடி வளர்ச்சி நிச்சயம் மேம்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்