நீளமான தலைமுடியை பெறுவதற்கு செய்ய வேண்டிய 5 எளிய வழிகள்..!
நீளமான தலைமுடி வேண்டும் என தன் வாழ்நாளில் ஆசைப்படாத பெண்ணே இருக்க முடியாது என்றே சொல்லலாம். அப்படி ஒவ்வொரு பெண்ணும் தனக்கு அழகான, அடர்த்தியான கூந்தல் இருக்க வேண்டும்; கூடவே அந்த கூந்தல் நேர்த்தியாக நீளமானதாக இருக்க வேண்டும் என்ற ஆசையும் கொண்டிருப்பர்.
இந்த பதிப்பில் பெண்கள் மிக எளிய வழிமுறைகளை பயன்படுத்தி நீளமான தலைமுடியை பெறுவது எப்படி என்பது பற்றி பார்க்கலாம்.
சரியான எண்ணெய்
உங்கள் தலைமுடிக்கு ஏற்ற சரியான எண்ணெயை தேர்ந்தெடுத்து, அதை தினசரி இரவு தூங்க செல்லும் முன் தலையில் நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.
தினசரி தலைமுடியின் வேர்க்கால்களை தூண்டி விடும் அளவுக்கு நன்கு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வந்தால் அது நேர்த்தியான தலைமுடியை பெற உதவும்.
தலைமுடியை வாருதல்
தலைமுடியை தினமும், சரியாக வாரி வருதல் மிகவும் அவசியம்; அதுவும் இரவு தூங்கும் பொழுது தலைமுடியை விரித்து விட்டு தூங்காமல், நன்கு தலைசீவி பின்னி விட்டுக்கொண்டு உறங்க வேண்டியது அவசியம்.
சரியான ஷாம்பூ
உங்கள் தலைமுடிக்கு ஏற்ற ஷாம்பூவை தேர்ந்தெடுத்து, அதனை வாரத்திற்கு இருமுறை என தலையில் தேய்த்து, சரியான முறையில் தலைமுடியை அலசி வந்தால், அது முடியின் போஷாக்கினை அதிகரித்து, முடியின் வளர்ச்சியை தூண்ட உதவும்.
முடி வெட்டிவிடுதல்
பெண்கள் தங்கள் தலைமுடியை மாதம் ஒருமுறை என தேவையான அளவு அல்லது தலைமுடி ஒரே அளவில் இருக்கும் வண்ணம் என தலைமுடியை வெட்டி விடுதல் தலைமுடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்; ஆகவே சரியான இடைவெளியில் பெண்கள் தங்கள் தலைமுடியை வெட்டி விடுதல் நன்று.
தலைமுடியை ஆட்டுதல்
தலைமுடியை மேலும் கீழும் என தலைமுடியை விரித்து விட்டு, தலையை ஆட்டுவதால் கூந்தலுக்கு கிடைக்கும் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்; இதனால் தலைமுடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.