மது அருந்துவதால் பொலிவான சருமம் பெற முடியும் என்பது உண்மையா?

Default Image

ஒவ்வொருவரும் வாழ்வில் வெற்றியாளராக திகழ வேண்டும் என எத்தகு ஆசை கொள்கின்றனரோ அதே அளவுக்கு, அழகானவர்களாக, மற்றவர் பார்த்து பொறாமைப்படும் வண்ணம் அழகு நிறைந்தவர்களாக திகழ வேண்டும் என்ற ஆசையும் மக்கள் மனதில் நிறைந்திருக்கிறது. மக்களின் அழகாக வேண்டும் ஆசையை நிறைவேற்ற பெரும்பாலானோருக்கு பிடித்த ஒரு விஷயத்தை செய்தாலே போதும் தெரியுமா!

அப்படி என்ன விஷயம் என யோசிக்கின்றீரா? அவ்விஷயம் மது அருந்துதல் ஆகும். அதிர்ச்சி அடைய வேண்டாம் நண்பர்களே! இந்த பதிப்பில் மது அருந்துவதால் பொலிவான சருமம் பெற முடியும் என்பது உண்மையா என்பது குறித்து படித்து அறியலாம்.

பியர்

பியர் அருந்துவது, முடி வளர்ச்சிக்கு உதவும் என பலர் அறிவர்; ஆனால், அதிலுள்ள சில வைட்டமின்கள் சருமத்தின் பொலிவான தோற்றத்திற்கு உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

பியர் அருந்தும் நபர்களின் சருமத்தில் பருக்கள் ஏற்படுவதும் குறைக்கப்பட்டு, சருமத்தின் பிஎச் அளவு சமநிலைப்படுத்தப்படுகிறது. சருமத்தின் செல்களை புதுப்பித்து, புத்துணர்வாக்கவும் பியர் உதவுகிறது.

வைன்

ரெட் வைன் அதிக ஆன்டி ஆக்சிடெண்டுகளைக் கொண்டுள்ளதால், அது வயதாகும் நிகழ்வைத் தடுத்து நீங்கள் என்றென்றும் இளமையாக இருக்க உதவும்; சருமத்தின் இளமைத்தோற்றத்திற்கு காரணமான கொலஜன் மற்றும் எலாஸ்டிக் போன்றவற்றை சருமத்தில் நிலைநிறுத்த வைன் உதவும்.

ஜின்

ஜின் எனும் பானம் ஜுனிப்பர் பெர்ரிகளால் தயாரிக்கப்படுவதால், அது தனித்துவமான சுவையைக் கொண்டிருக்கும்; இது உடல் மற்றும் முகத்தின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மகம் மற்றும் உடலின் இளமைத் தோற்றத்தை பாதுகாக்கிறது.

வோட்கா

முகத்தில் கரும்புள்ளிகள், குழிகள் போன்ற சரும பிரச்சனைகள் நிலவினால், அவற்றை உடனடியாக போக்க, வோட்கா உதவும்; வோட்காவினால் முகத்தைக் கழுவினால் முகத்தில் நிலவும் இந்த அத்தனை பிரச்சனைகளையும் விரைவில் போக்கிவிடலாம்.

ரம்

ரம் என்பது வித்தியாசமான சுவை கொண்ட குளிர்கால குடிபானமாகும்; இது நல்ல ஆன்டி பாக்டீரியா பண்புகளைக் கொண்டுள்ளது. இதனை பயன்படுத்தி முகத்தில் ஏற்படும் பருக்கள், வடுக்கள் போன்ற சரும பிரச்சனைகளை குணப்படுத்தலாம்.

இதனை ரோஸ் வாட்டருடன் 1:2 எனும் விகிதத்தில் கலந்து முகத்தில் பிரச்சனைகள் இருக்கும் இடத்தில் தடவினால், நல்ல பலன்களை விரைவில் கொடுக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்