கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையங்களை போக்க உதவும் வீட்டுவைத்திய குறிப்புகள்!
ஆண்கள், பெண்கள் என பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை, கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் ஆகும். முகத்தில் கருவளையங்கள் ஏற்பட்டுவிட்டாலே முகத்தின் பொலிவு குன்றிவிடும்; முகத்தில் களை என்பது குறைந்து, களைப்பு அதிகமாகிவிடும். முகத்தின் அழகை அதிகரிக்க அல்லது இருக்கும் அழகை தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கும் பொழுது கருவளையங்களை நீக்குவது தான் முதல் வேலையாக இருக்க வேண்டும்.
இந்த பதிப்பில் கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையங்களை போக்க உதவும் வீட்டுவைத்திய குறிப்புகள் பற்றி படித்தறியலாம்.
உருளைக்கிழங்கு ஜூஸ்
கண்களை சுற்றி இருக்கும் கருவளையங்களை போக்க உருளைக்கிழங்கினை சாறு எடுத்து அதை தடவி, குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்; பின்னர் நன்கு கழுவி விட வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் கருவளையங்களை நீக்கி விடலாம்.
தக்காளி சாறு
தக்காளியை சாறெடுத்து, அதை ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன் கலந்து கண்களில் சுற்றியுள்ள கருவளையங்களின் மீது தடவி 10-20 நிமிடங்கள் ஊற வைத்து, லேசாக மசாஜ் செய்து அதை கழுவினால், விரைவில் கருவளையங்கள் நீங்கி விடும்.
தேநீர் பைகள்
தேநீர் தயாரிக்க உபயோகித்த பைகளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அதை கண்களின் கீழாக உள்ள கருவளையங்களின் மீது வைத்து, சிறிது நேரம் பின் நீக்கிவிட வேண்டும்; இதை தொடர்ந்து செய்து வந்தால் கருவளையங்களை விரைவில் நீக்கிவிடலாம்.
ஆரஞ்சு சாறு
ஆரஞ்சு பழத்தின் சாறும் கண்களின் கீழாக ஏற்படும் கருவளையங்களை போக்க உதவும் நல்ல மருந்து; இதை கருவளையங்களின் மீது தடவி 10 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் கழுவ வேண்டும்; இதை தொடர்ந்து செய்தால் கருவளையங்களை எளிதில் நீக்கிவிடலாம்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயை ஸ்லைஸ் செய்து அதை கருவளையங்களின் மீது அரை மணி நேரம் வைத்து ஊற விட வேண்டும்; பின் கண்களை உடனே கழுவி விடாமல், பத்து நிமிடங்கள் வெள்ளரிக்காயை எடுத்த பின்னும் ஊற வைக்க வேண்டும், இதன் பின்னர் கழுவ வேண்டும். இது கருவளையங்களை போக்க மிகவும் உதவும்.