மீசை மற்றும் தாடியில் உள்ள வெள்ளை முடிகளை கருமையாக்கும் 5 குறிப்புகள் உங்களுக்காக..!

Default Image

ஆண்மகன்களின் அழகே மீசையும் தாடியும் தான். இது எந்த அளவிற்கு அழகாக உள்ளதோ அந்த அளவிற்கு இவை மற்றவரை கவர கூடும். இந்தியர்களின் முடியின் நிறம் கருப்பு என்பதால் நம் முடியில் சிறிய வெள்ளை வந்தால் கூட பெரிய பாதிப்பாக நாம் எண்ணுவோம்.

வெள்ளை முடி வந்தால் ஏனோ வயதான எண்ணம் வந்து விடும் போல. இதில் கொடுமை என்னவென்றால், இளம் வயதிலே வர கூடிய இளம் நரைகள் தான். இப்படி வர கூடிய வெள்ளை முடிகளை நீக்க ஒரு சில எளிய வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அவை என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நெல்லி
வெள்ளையாக உள்ள தாடி மற்றும் மீசை முடிகளை கருமையாக்க நெல்லி குறிப்பு உங்களுக்கு உதவும். இதற்கு 2 ஸ்பூன் நெல்லி சாற்றை 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தாடி முடியில் தடவி இரவு முழுவதும் அப்படியே விட்டு மறுநாள் முடியை கழுவவும். இதை வாரத்திற்கு 1 முறை இவ்வாறு தடவி வரலாம்.


கருவேப்பில்லை
கருவேப்பில்லையை காய வைத்து பொடியாக்கி கொண்டு, அதன் பின் இதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தாடியில் தடவி, 30 நிமிடத்திற்கு பின் நீரை கொண்டு கழுவலாம். இந்த குறிப்பு வெள்ளைகளை கருமையாக மாற்றி விடும்.

பசும்நெய்
தாடி மற்றும் மீசையில் வெள்ளை முடிகள் இருந்தால் அதனை மிக எளிதில் பசும்நெய்யை வைத்து தீர்வு கண்டு விடலாம். 5 நிமிடம் நெய்யை தாடியில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். பிறகு நீரால் கழுவி விடவும். இவ்வாறு செய்து வந்தால் வெள்ளைகள் கருப்பாக மாறும்.

உருளைக்கிழங்கு
6 உருளைக்கிழங்கின் தோலை சீவி கொண்டு, அதனை 2 கப் நீரில் 5 நிமிடம் வரை மிதமான சூட்டில் கொதிக்க விடவும். பிறகு இதனை வடிகட்டி கொண்டு தாடி மற்றும் மீசையில் தடவி வந்தால் முடிகள் கருமையாக மாறி விடும்.

கற்றாழை
அரை ஸ்பூன் வெண்ணெய்யை எடுத்து கொண்டு 1 ஸ்பூன் கற்றாழை சாற்றுடன் கலந்து, பிறகு இதனை தாடியில் தடவி வந்தால் கருமை பெற்று விடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்