உங்கள் பற்கள் பளிச்சுனு ஆகணுமா ? இதோ சில வழிகள்
- பற்கள் பளிச்சுன்னு வெண்மையாக சில வழிமுறைகள்.
நாம் நமது அன்றாட வாழ்வில் பலவகையான உணவு பொருட்களை பயன்படுத்திக்கிறோம். அனைத்து பொருட்களுமே நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதில்லை. நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் நமது உடலுக்கு பல ஆரோக்கிய கேடுகளைத் தான் ஏற்படுத்துகிறது.
பற்கள்
அந்த வகையில், நாம் உண்பதற்காக உபயோகப்படுத்தும் பல பொருட்கள், நமது பற்களுக்கும் சேதாரத்தை ஏற்படுத்துகிறது.நமது முன்னோர்கள் அக்காலங்களில் பல் துலக்குவதற்கு கரி, செங்கல், வேப்பங்குச்சி போன்றவற்றை பயன்படுத்தினர்.
ஆனால், இன்று நாம் அதை பார்த்தால் ஏளனமாக நினைப்பதுண்டு, நமது நாகரீகத்திற்கு ஏற்றவாறு, பல வகையான கெமிக்கல் கலந்த பற்பசைகள் வந்துவிட்டன. இதில் உள்ள கெமிக்கல்கள் நமது உடலுக்கு பல ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்துகிறது.
தற்போது இந்த பதிவில், பற்களில் உள்ள மஞ்சள் கரை மற்றும் பல பிரச்சனைகளை போக்குவதற்கான சில எளிய வழிகளை பற்றி பார்ப்போம்.
பற்பசை மற்றும் உப்பு
பற்களில் மஞ்சள் கரை உள்ளவர்கள், பற்பசையில் சிறிதளவு உப்பு சேர்த்து தினமும் 2 முறை பல் துலக்கினால், பற்களில் உள்ள கறை நீங்கி பளிச்சென்று வெண்மையாகி விடும்.
உப்பை பயன்படுத்தும் போது, சிறிதளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிகமாக பயன்படுத்தினால், பற்களின் எனாமல் பாதிக்கப்படும்.
ஆரஞ்சு பழத் தோல்
பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்க, இரவு தூங்க போகும் முன்பு ஆரஞ்சு பழத் தோலை பற்களில் நன்றாக தேய்த்து, அடுத்த நாள் காலியில் பற்களை கழுவ வேண்டும். ஆரஞ்சு பழத் தோலில் உள்ள வைட்டமின் வைட்டமின் சி மற்றும் கால்சியம் சத்துக்கள் பற்களின் மஜால் கறையை போக்கி, பற்களை வலிமையாக்குகிறது.
எலுமிச்சை சாறு மற்றும் உப்பு
பற்களில் மஞ்சள் கறை உள்ளவர்கள், எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து பற்களை தேய்த்து 2 நிமிடம் ஊற வைத்து, பின்பு பற்களை கழுவினால் பற்கள் வெண்மையாகிவிடும்.
இதனை தொடர்ந்து 2 வாரங்களுக்கு செய்து வந்தால், பற்களின் மஞ்சள் கறை நீங்கி பளிச்சிடும் வெண்மையாகிவிடும்.
ஆப்பிள் கேரட்
நாம் ஆண்ராடம் பயன்படுத்தும் பழங்களில் பல வகையான சத்துக்கள் உள்ளது. அவை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல;லாது பற்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. ஆப்பிள், கேரட், வெள்ளரிக்காய் போன்ற பழங்கள் பற்களை வெண்மையாக வைத்திருக்க உதவுகிறது.
மதுப்பழக்கம் வேண்டாம்
இன்று அதிகமானோர் அடிமையாகி உள்ள ஒரு தீய பழக்கம் என்னெவென்றால், மதுப்பழக்கம் தான். புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக பற்களில் மஞ்சள் கறை ஏற்ப்படும்.
காபி, டீ
காபி மற்றும் டீ அதிகமாக குடிப்பவர்களுக்கு பற்கள் சம்பந்தமா பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அடிக்கடி காபி மற்றும் டீ குடிக்கும் பழக்கத்தை விட்டுவிடுங்கள்.