பொடுகு தொல்லையால் கஷ்டப்படுறீங்களா ? இதோ பொடுகு தொல்லையில் இருந்து விடுபட சூப்பர் டிப்ஸ்
- பொடுகு தொல்லையில் இருந்து விடுதலை பெற சில வழிகள்.
இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் கூந்தல் பிரச்னைகளில் ஒன்றான பொடுகு தொல்லையால் பல பாதிக்கப்படுகின்றனர். பொடுகு தொல்லையால் பலர் பல, கெமிக்கல் கலந்த செயற்கையான மருத்துவ முறைகளால் பல பக்கவிளைவுகளை உள்ளாகின்றனர்.
தலையில் பொடுகு வருவதற்கான காரணம்
தலையில் பொடுகு ஏற்படுவதற்கு நாம் முக்கிய காரணமாக இருக்கிறோம். தலைமுடியை சீராக பராமரிக்காததால் தான் இந்த பிரச்னை ஏற்படுகிறது. குளித்து விட்டு தலையை ஒழுங்காக துவட்டாமல் இருப்பது, தலையை எண்ணெய் பசையுடன் அழுக்காக வைத்துக் கொள்வது போன்ற காரணங்களால் தான் பொடுகு தொல்லை ஏற்படுகிறது.
மேலும், நாம் விதவிதமான கெமிக்கல் கலந்த ஷாம்புக்களை பயன்படுத்துவதாலும், இந்த பிரச்னை ஏற்படுகிறது.
பொடுகு தொல்லையில் இருந்து விடுபட சில வழிகள்
வேப்பிலை
வேப்பிலை ஒரு சிறந்த கிருமிநாசினியாக செயல்படுகிறது. பொடுகு பிரச்னை உள்ளவர்கள் மலை வேம்பு இலையுடன் துளசி இலையை சேர்த்து நன்றாக அரைத்து சாறு பிழிந்து தலைமுடியின் வேர் பகுதியில் நன்றாக தேய்க்க வேண்டும்.
பின், தலையை நன்றாக தேய்த்து குளித்து வந்தால், பொடுகு பிரச்சனையில் இருந்து விடுதலை பெறலாம்.
சின்ன வெங்காயம்
பொடுகு பிரச்சனை உள்ளவர்கள் நமது தலைக்கு தேவையான அளவு எடுத்து, அதனை நன்றாக அரைத்து சாறு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை தலையில் நன்கு தேய்த்து, 15 நிமிடங்கள் நன்றாக ஊற வைத்து, வெத்துப்பான தண்ணீரில் குளித்தால், பொடுகு தொல்லையில் இருந்து விடுதலை பெறலாம்.
வெந்தயம்
பொடுகு தொல்லை உள்ளவர்கள் வெந்தயத்தை இரவு ஊற வைத்து மறுநாள் காலையில், அதனை செம்பருத்தி இலையுடன் சேர்த்து அரைத்து, தலையில் தேய்த்து, 30 நிமிடங்கள் ஊற வைத்து, பின் குளித்தால் பொடுகு தொல்லையில் இருந்து விடுதலை பெறலாம்.
ஆலிவ் ஆயில்
பொடுகு தொல்லை உள்ளவர்கள், ஆலிவ் ஆயிலில் சிறிதளவு இஞ்சி சாறு கலந்து, தலையில் தேய்த்து, 30 நிமிடங்கள் ஊற வைத்து, பின் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் பொடுகு தொலையில் இருந்து விடுதலை பெறலாம்.
தேங்காய் எண்ணெய்
பொடுகு தொல்லை உள்ளவர்கள் தலையில் தேங்காய் எண்ணெய் தேய்க்கும் போது, சிறிதளவு வசம்பு தூள் கலந்து தேய்த்து வந்தால், பொடுகு தொல்லையில் இருந்து விடுதலை பெறலாம்.