பாகற்காயை உண்டு வந்தால் இத்தனை நன்மைகளா? ஆச்சரியப்படாமல் படிக்கவும்!
பாகற்காய் என்றாலே கசப்புத்தன்மை கொண்டது; சர்க்கரை நோய்க்கு நல்லது என்ற இரண்டு விஷயங்கள் தான் நம் கண் முன் வந்து நிற்கும். ஆனால், பாகற்காயை சரியான முறையில் சமைத்து உண்டு வருவதனால் ஏகப்பட்ட உடல் அழகு குறித்த – உடல் தோற்றம் தொடர்பான பலன்கள் ஏற்படும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம்! பார்க்க கொடூரமாக இருக்கும் பாகற்காய், பலவித அழகு பலன்களை வாரி வழங்குகிறது; இந்த பதிப்பில் பாகற்காய் மூலமாக என்ன அழகு நன்மைகளை உடல் பெறும் என்பது குறித்து பார்க்கலாம், வாருங்கள்!
துள்ளுவதோ இளமை
பாகற்காயை சரிவர உண்டு வந்தால், அது உடலை என்றும் இளமையாக வைத்திருக்க உதவுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் நண்பர்களே! பாகற்காயை வறுத்தோ பெரித்தோ உண்ணுதல் கூடாது.
பாகற்காயை வேகவைத்து, அதன் மீது எலுமிச்சை சாறு பிழிந்து, உப்பு, தேவையான அளவு காரம் சேர்த்து உட்கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் அது வயதாகும் மாற்றத்தை தாமத்தித்து, உங்கள் இளமைக்காலத்தை நீட்டிக்க உதவும்.
இரத்தத்தை தூய்மையாக்கும்
பாகற்காயை தொடர்ந்து உண்டு வந்தால் அது இரத்தத்தில் இருக்கும் கழிவுகளை நீக்கி, இரத்தத்தை தூய்மைப்படுத்த உதவும்.
சரும தூய்மைப்படுத்தி
சருமத்தில் இருக்கும் மாசு மருக்களை போக்க உதவும் சரும தூய்மைப்படுத்தியாக பாகற்காய் செயல்படுகிறது; பாகற்காயை 2 தேக்கரண்டி அளவு சாறெடுத்து, 2 தேக்கரண்டி ஆரஞ்சு சாறுடன் கலந்து முகம் மற்றும் சருமத்தில் தடவி அது நன்கு காய்ந்த பின், சருமத்தை கழுவ வேண்டும்.
இது போன்று தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தில் காணப்படும் மாசு மருக்கள் நீங்கி சருமம் சுத்தமாகிவிடும்.
சரும பிரச்சனைகள்
சருமத்தில் காணப்படும் பரு, தழும்பு, கரும்புள்ளிகள் போன்ற அனைத்து பிரச்சனைகளையும் போக்கி, சருமத்திற்கு புதுப்பொலிவு அளிக்க பாகற்காய் பெரிதும் உதவுகிறது.