கழுத்து பகுதியில் ஏற்படும் கருமையை போக்குவதற்கு உதவும் 5 இயற்கை வழிகள்!
நம்மில் பெரும்பாலானோருக்கு, ஆண்கள்-பெண்கள் என பலருக்கும் கழுத்துப் பகுதியில் கருமைபடர்ந்து காணப்படுவதுண்டு. இந்த கழுத்தின் கருமை நிறம் உடலின் மற்ற பாகங்களை காட்டிலும் வித்தியாசமானதாய் இருக்கும்; இதனால் சரும அழகு சீர் குலையும். இந்த கழுத்தின் கருமை சரியான உடல் சுத்தமின்மையால் ஏற்படுவதுண்டு; சில நேரங்களில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுவதுண்டு.
இந்த பதிப்பில் கழுத்து பகுதியில் ஏற்படும் கருமையை போக்குவதற்கு உதவும் 5 இயற்கை வழிகள் பற்றி படித்து அறியலாம்.
கற்றாழை
கற்றாழையில் உடலின் அழகை மேம்படுத்தக்கூஓடிய பல வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் நிறைந்துள்ளன. கற்றாழையின் பச்சை மேற்பகுதியை நீக்கி, அதன் உள்ளிருக்கும் வெள்ளை ஜெல்லை கழுத்து பகுதியில் தடவி ஊற வைத்து, சற்று நேரத்திற்கு பின் கழுவி விட வேண்டும். இதே போல் தொடர்ந்து செய்து வந்தால், கழுத்தின் கருமை நிறம் மறைந்து விடும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கினை துருவி சாறெடுத்து, அதை கழுத்தில் கருமை படர்ந்திருக்கும் பகுதியில் தொடர்ந்து தடவி, 15 நிமிடங்கள் ஊற வைத்து வந்தால் கழுத்தின் கருமை நிறம் மறைந்துவிடும்.
ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகரை 2 தேக்கரண்டி எடுத்துக் கொண்டு, அதை தண்ணீர் கொண்டு நீர்த்து கழுத்தின் கருமை பகுதியில் தடவி ஊற வைக்க வேண்டும்; பின்னர் கழுவி விட வேண்டும். இந்த முறையை தொடர்ந்து பின்பற்றி வருவது, நல்ல மாற்றத்தை காண உதவும்.
பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயை தேவையான அளவு எடுத்து, அதனை கழுத்தில் கருமை பகுதி இருக்கும் இடத்தில் நன்கு மசாஜ் செய்து வந்தால் கழுத்தின் கருமை மறைந்து விடும்.
யோகர்ட்
யோகர்ட் எனும் தயிர் வகையில் வைட்டமின் இ நிறைந்திருக்கிறது; வைட்டமின் இ தூய்மைப்படுத்தும் குணம் கொண்டது. இதனை கழுத்தின் கருமை பகுதியில் தடவி வருவது கழுத்தின் கருமையை விரைவில் போக்க உதவும்.