வெல்லத்தை தின்றால் வெள்ளையாகிவிடலாம் என்ற உண்மையை அறிவீரா?
அதிக சரும பிரச்சனைகளை சந்திக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள், எந்த வயதினராயினும் செய்ய வேண்டியது என்ன என அறியாமல் குழம்பித் தவிப்பதுண்டு. முகம் மற்றும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளால், உங்கள் அழகு குறைந்து – தன்னம்பிக்கை குறைந்து – நீங்கள் மனவருத்தம் அடைவீர். பலர் சந்திக்கும் இந்த பிரச்சனைக்கு நாம் பாரம்பரியம் பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் ஒரு பொருள் நிரந்தர மற்றும் சிறந்த தீர்வை தரும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம்! உண்மை தான். நாம் காலங்காலமாக பயன்படுத்தி வரும் வெல்லத்தை தின்றால் சரும பிரச்சனைகள் அனைத்தையும் நீக்கி,வெள்ளையாகிவிடலாம் என்ற உண்மையை பற்றி இங்கு படித்து அறியலாம்.
பருக்கள்
நம்மில் பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை முகத்தில் தோன்றும் பருக்கள்; இதனால் முக அழகு முற்றிலும் குறைந்து மறைந்து விடுகிறது. இப்பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு சிறு எலுமிச்சை அளவு வெல்லத்தை தின்று வந்தாலே போதும்!
வெல்லத்தில் உள்ள சத்துக்கள் பருக்கள் ஏற்படாமல் தடுத்து, முகத்தில் உள்ள தழும்புகளை போக்க உதவுவதாகவும், சருமத்திற்கு பொலிவை தருவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
முகச்சுருக்கம்
வெல்லத்தை தினமும் தின்று வருவது முகத்தில் உருவாகும் சுருக்கங்களை முற்றிலுமாக போக்க உதவும். வெல்லத்தை உண்பது சருமத்தின் சுருக்கங்களை நீக்கி, வயதாவதை தடுத்து, உங்களை எப்பொழுதும் இளமையாக வைக்க உதவும்.
ஷைனிங் கூந்தல்
ஷைனிங் கூந்தல் பெற விரும்பும் நபர்கள், ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி முல்தானி மிட்டி, சிறிது வெல்லம், நீர் இவற்றை ஒன்றாய் கலந்து தலைமுடியில் தேய்த்து 10 நிமிடங்கள் ஊற வைத்து பின் தலைமுடியை அலச வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் ஷைனிங் கூந்தலை பெற்று விடலாம்.
மிருதுவான சருமம்
மிருதுவான சருமம் பெற 1 தேக்கரண்டி வெல்லம், சில துளிகள் எலுமிச்சை சாறு, 2 தேக்கரண்டி தேன் முதலியவற்றை கலந்து முகம் மற்றும் சருமத்தின் மீது தடவி வந்தால், சருமம் மிக மிருதுவானதாக மாறிவிடும். வெல்லத்தில் இருக்கும் கிளைக்காலிக் அமிலம் சருமம் மிருதுவாக உதவும்; ஆகையால் இம்முறை நிச்சயம் பலனளிக்கும்.
நிறம் அதிகரிப்பு
வெல்லத்தை சில துளிகள் எலுமிச்சை சாறு, சிறிதளவு மஞ்சள், 1 தேக்கரண்டி தக்காளி சாறு போன்றவை கலந்து சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், சருமத்தின் கருமை நிறம் நீங்கி, சருமத்தின் நிறம் மேம்படும்.
இக்கலவையை சருமத்தின் மீது தடவிய பின், 15 நிமிடங்கள் ஊற வைத்து பிறகு சாதாரண நீர் கொண்டு கழுவி விட வேண்டும். இம்முறையை தொடர்ந்து பின்பற்றி வந்தால், நல்ல பலனை பெறலாம்.