வெள்ளை முடிகளை கருமையாக்க 2 உருளைக்கிழங்கின் தோல் மட்டும் போதும்! எப்படி தெரியுமா?
ஏற்கனவே வெளியில் இருக்க கூடிய பிரச்சினைகள் பத்தாது என்பதை போல நமக்கு நம்மிடம் இருந்தே, பலவித உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகள் உண்டாகிறது. இதில் மிக மோசமான பிரச்சினையாக பலருக்கும் இருப்பது முடி பிரச்சினை தான். முடி கொட்டுதல், வெள்ளை முடி, பொடுகு, அரிப்பு இது போன்ற முடி பிரச்சினைகள் நம்மை மோசமான நிலைக்கு தள்ளுகிறது.
இதில் இளம் வயதிலே நரை முடி வருவது தாங்கி கொள்ள இயலாத ஒன்று. ஆனால், இதற்கு வெறும் உருளைக்கிழங்கு தோலை வைத்தே தீர்வை தர இயலும் என தற்போது கண்டறிந்துள்ளனர். இதை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை இது வரை சிப்ஸாகவோ, வறுத்தோ, பொரித்தோ நாம் சாப்பிட்டு இருப்போம். ஆனால், இதன் தோலை பயன்படுத்தாமல் அப்படியே தூக்கி எரிந்து விடுவோம். உண்மை என்னவெனில், இதில் தான் அதிக சத்துக்கள் உள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன.
ஊட்டச்சத்துக்கள்
உருளைக்கிழங்கில் உள்ள பல்வேறு தாதுக்கள், ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் தான் இதன் ஆரோக்கிய தன்மைக்கு மூல காரணம். குறிப்பாக வைட்டமின் சி, பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் முதலிய சத்துக்கள் தான் இதற்கு காரணம்.
தேவையான பொருட்கள்
வெள்ளை முடியை கருமையாக்க நமக்கு சில பொருட்கள் தேவை. இவற்றை கொண்டு தயாரிக்கும் நீரை தலைக்கு தடவி வந்தால் முடி கருமையாகும்.
2 உருளைக்கிழங்கு தோல்
2 கப் நீர்
தயாரிக்கும் முறை
முதலில் உருளைக்கிழங்கின் தோலை தனியாக உறித்து எடுத்து கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் இதன் தோலை சேர்த்து கொதிக்க விடவும். 10 முதல் 15 நிமிடம் வரை இந்த நீரை கொதிக்க விட வேண்டும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு இறக்கி கொள்ளவும்.
குளிர்ந்த பிறகு இதனை வடிகட்டி தலைக்கு தடவி வரலாம். அரை மணி நேரம் இந்த நீர் தலையில் ஊறிய பின் தலைக்கு குளிக்கலாம். இந்த முறையை வாரத்திற்கு 1 அல்லது 2 முறை தவறாது செய்து வந்தால் வெள்ளை முடிகள் கருமையாக மாறும்.