சரும பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கேல்
- சரும பிரச்சனைகளை நீக்கும் கேல் கீரை.
இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே சரும பிரச்சனைகள் தான். இந்த பிரச்சனைகளுக்கு டனடியாக தீர்வு காணவேண்டும் என்று நாம் செயற்கையான மருத்துவ முறைகளை கையார்க்கிறோம்.
ஆனால், இயற்கையான வழிமுறைகள் மூலம் நம் பெரும் சரும அழகு நிரந்தரமானதாக இருக்கும். தற்போது சரும பிரச்சனைகளை நீக்கும் கேல் கீரையை பற்றி பார்ப்போம்.
தேவையானவை
- கேல் – 1 கப் (நறுக்கியது)
- தேன் – 2 ஸ்பூன்
- தண்ணீர் – அரை கப்
செய்முறை
கேல் கீரையில் தேன் மற்றும் தண்ணீர் சேர்க்கவும், மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவை மெல்ல மெல்ல ஒரு பச்சை நிற திரவமாக மாறும் வரை அரைக்க வேண்டும். வடிகட்டியால் ஜூஸை மட்டும் தனியாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். இந்த ஜூஸை முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் அல்லது முற்றிலும் காயும் வரை ஊறவிட்டு, பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இதில், ஆண்டிஆக்சிடெண்ட்களும், அமினோ அமிலங்களும் நிறைந்திருக்கின்றன. வயதாவதன் அறிகுறிகளை எதிர்த்து போராடும் எல்லா விஷயங்களும் இதில் நிறைந்திருக்கின்றன. மேலும், இது சரும அழகை மெருகூட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.