Beauty Tips : கருவளையம் ஏற்பட என்ன காரணம்..? இதற்கு என்ன தீர்வு..!

DarkCircle

பொதுவாக பெண்கள் தங்களது சரும அழகை மேம்படுத்துவதில் மிகவும் கவனமாக இருப்பார்கள்.  அதிலும் இன்று பெரும்பாலான பெண்கள் கருவளையத்தை போக்க கெமிக்கல் கலந்த பல வகையான கிரீம்களை பயன்படுத்துகின்றனர். இப்படிப்பட்ட கிரீம்களை பயன்படுத்தும் போது பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும்.

கருவளையம் ஏற்படக் காரணம் 

கருவளையம் இன்று பெரும்பாலான பெண்களுக்கு காணப்படுகிறது. அதில்  குறிப்பாக தூக்கமின்மை கருவளையம் ஏற்பட முக்கிய காரணமாக காணப்படுகிறது. தூக்கம் இல்லாத காரணத்தினால் கண்களுக்கு கீழ் திரட்சி ஏற்பட்டு கருவளையம் தோன்றுகிறது. எனவே தினமும்  குறைந்தது ஆறு மணி நேரமாவது தூங்க வேண்டும்.

சிறுநீரக செயலிழப்பு, ஹார்மோன் மாற்றங்கள் காரணமாகவும் கருவளையம் ஏற்படுகிறது. சிலருக்கு மரபணு ரீதியாகவும் கருவளையம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதே சமயம் கண்களின் கீழ் உள்ள தோலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக காணப்படும் போதும் இந்த கருவளையம் ஏற்படுகிறது. இரவு நேரத்தில் அதிகமாக மொபைல் பார்ப்பது கருவளையம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கருவளையத்தை தடுக்க சில குறிப்புகள் 

கருவளையம் ஏற்படுவதை தடுக்க தினமும் குறைந்தது 6 மணி நேரம் தூங்குவது மிக அவசியமாகும். சிலருக்கு சூரிய ஒளியின் காரணமாகவும் கருவளையம் ஏற்படும் என்பதால் அப்படிப்பட்டவர்கள் வெளியில் செல்லும்போது சன் கிளாஸ் அணிந்து செல்லலாம்.

இரும்பு சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம். அதிகப்படியான உப்பு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதே சமயம் கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள் பல இருந்தாலும் மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை பெறுவது மிக அவசியமாகும்.

இயற்கையான வீட்டு வைத்தியம் 

பெரும்பாலானவர்கள் வீட்டில் காற்றாழை இருக்கும். இந்த கற்றாழையின் ஜெல்லை எடுத்து இரவு தூங்க செல்வதற்கு முன் கணைகளை சுற்றி தடவி விட்டு உறங்க செல்லலாம்.

அதே போல், வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி அதனை இரண்டு கண்களிலும் 30 நிமிடங்கள் வைத்து இருக்க வேண்டும். இவை இயற்கையான முறையில் கருவளையத்தை போக்க கூடிய சில வழிகள் ஆகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்