பெண்களே ஜாக்கிரதை..! கண்களுக்கு கீழே உள்ள தோலில் இந்த 5 பொருட்களை மட்டும் பயன்படுத்தாதீர்கள்..!

Eyecare

உங்கள் கண்களுக்குக் கீழே எந்தெந்தப் பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என்பதை அறிந்து கொள்வோம்.

முகத்தின் மற்ற பகுதிகளைப் போலல்லாமல், உங்கள் கண்களுக்குக் கீழே உள்ள தோல் ஒரு உணர்திறன் வாய்ந்த பகுதி, எனவே அதனை பராமரிப்பதிதில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். கருவளையங்களைத் தடுக்க அல்லது வீக்கத்தைக் குறைக்க உங்கள் கண்களுக்குக் கீழே எந்தெந்தப் பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என்பதை நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக கண்களுக்கு கீழே இந்த 5 பொருட்களை மட்டும் உபயோகிக்க கூடாது.

செயற்கை வாசனை திரவியங்கள் 

eyecream
eyecream [Imagesource : Representative]

செயற்கை வாசனை திரவியங்களை கண் இமைகள் மற்றும் கண் இமைகளுக்கு அருகில் பயன்படுத்தும்போது,  அது அந்த மென்மையான பகுதியில் சிவந்து அரிப்பை உண்டாக்கும்.  கண்களுக்கு எரிச்சலூட்டும் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும், இது அசௌகரியம் மற்றும் மங்கலான பார்வைக்கு வழிவகுக்கும். எனவே கண்களுக்கு அருகில் செயற்கை வாசனை திரவியங்களைக் கொண்ட பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

ஸ்டெராய்டுகள்

ஸ்டெராய்டுகள் கண்களுக்குக் கீழே உள்ள சருமத்தை மேலும் மெல்லியதாக மாற்றும். அத்துடன் சருமத்தை சூரிய ஒளியில் அதிக உணர்திறன்  ஏற்படுத்தி, ஒவ்வாமைக்கு ஆளாக்கும் என்பதால், இது கண்களுக்குக் கீழே  பயன் படுத்துவதை தவிர்க்க  வேண்டும்.

ஆல்கஹால்

ஆல்கஹால் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை நீக்கி, வறண்ட மற்றும் வறட்சியான சருமத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. கண்களின் கீழ் பயன்படுத்தும்போது, ​​அது எரிச்சலை ஏற்படுத்தும், சில சந்தர்ப்பங்களில் தீக்காயங்களை  ஏற்படுத்துவதற்கு கூட வாய்ப்புள்ளது. எனவே இதை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

சாலிசிலிக் அமிலம்

eye
eye [Imagesource : Representative]

சாலிக் அமிலத்தை பொறுத்தவரையில், சாலிசிலிக் அமிலம் முகத்தில் தோலுக்கு பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், கண்களுக்குக் கீழே உள்ள மென்மையான தோலில், அது எரிச்சலையும், வறட்சியையும் உண்டாக்குகிறது, மேலும் அந்தப் பகுதியில் சுருக்கம் உண்டாக்கும். எனவே, சாலிசிலிக் அமிலத்தை கண் பகுதியைச் சுற்றி எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். அதைப் பயன்படுத்துவதற்கு முன்பு தோல் மருத்துவரிடம் ஆலோசித்த பின் பய்னபடுத்துவது நல்லது.

ஃபார்மால்டிஹைடு

கண்களுக்கு கீழே பயன்படுத்தும் கிரீம்களின் ஃபார்மால்டிஹைடுக்கான மூலப்பொருள் பட்டியலை ஆய்வு செய்ய வேண்டும். அதன் இது கண்ணுக்கு அடியில் உள்ள தோலால் எளிதில் உறிஞ்சப்பட்டு வீக்கம் மற்றும் வெடிப்புகள் உட்பட பலவிதமான பாதகமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் மிகவும் கவனமாக செயல்படுவது நல்லது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்