கத்தி இல்லாமல் மூல நோயை குணப்படுத்தும் துத்தி இலை மருத்துவம்..! வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

Default Image

Piles treatment-மூலநோயை வீட்டிலேயே எளிமையான முறையில் குணப்படுத்துவது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

சாலை ஓரங்களில் இதய வடிவத்தில் மஞ்சள் நிற பூக்களுடன் பூத்துக் குலுங்கும் இந்த துத்தி இலைகள் பல மருத்துவ நன்மைகளைக் கொண்டுள்ளது ,குறிப்பாக இது மூல நோய்க்கு சிறந்த மருந்தாக கூறப்படுகிறது. இது கீரை வகையைச் சார்ந்ததாகும்.

துத்தி இலை மருத்துவம்:

துத்தி இலை மூலம் ,பவுத்திரம் மற்றும் பெருங்குடல் பிரச்சனையை சரி செய்ய கூடியது .

துத்தி இலைகளை மிக்ஸியில் அரைத்து அதை மோருடன் கலந்து குடித்து வந்தால் மூலம் மற்றும் பவுத்திரம்  குணமாகும்.

துத்தி இலைகளை விளக்கெண்ணையில் வதக்கி அதை சூடு பொறுக்கும் அளவில் ஆசனவாயில் அதாவது மூலம் இருக்கும் இடத்தில் வைத்து கட்டி வந்தால் மூலம் சுருங்கி கடுப்பும் குறைந்து விரைவில் குணமாகும்.

துத்தி இலைகளை பத்து எடுத்து அதை கழுவி நன்கு அரைத்து  அரை டம்ளர்  எடுத்து வைத்துக் கொள்ளவும் .அதனுடன் வெதுவெதுப்பான பால் அரை டம்ளர் கலந்து சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு வாரம் குடித்து வரவும். தீவிரம் சற்று அதிகமாக இருப்பவர்கள் 15 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளவும்.

துத்தி இலை சாறுடன் சிறிது மஞ்சள் தூள் கலந்து புண் இருக்கும் இடத்தில் கட்டி வர விரைவில் புண்கள் ஆறும்.

துத்தி இலை சற்றுடன் பச்சரிசி மாவு கலந்து கட்டிகள் உள்ள இடத்தில் கட்டினால் கட்டிகள் விரைவில் உடைந்து விடும்.

துத்தி இலைகளை பருப்புடன் சேர்த்து சமைத்தும் சாப்பிட்டு வரலாம். இதனால் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு மற்றும் வெள்ளைப்படுதல் குணமாகும். ஆண்மைக் குறைவு மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்கும். மேலும் இது ஒரு சிறந்த வழி நிவாரணியாகவும் உள்ளது. துத்தி இலைகளை பயன்படுத்தும் போது அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

மூல நோய்களை ஆரம்ப காலகட்டத்திலேயே சரி செய்வது தான் நல்லது .மேலும் மூல நோய்க்கு கத்தி தான் வைக்க வேண்டும் என்று இல்லை துத்தியை  வைத்து கூட சரி செய்யும் முடியும். இந்த துத்தி இலைகளை சரியான முறையில் பயன்படுத்தினால் இதன் மருத்துவ பலனை எளிதில் பெற முடியும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்