Jack fruit seed curry -கறி குழம்பு சுவை போல பலாக்கொட்டை குழம்பு செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
மிக்ஸியில் சீரகம், மிளகு, சோம்பு, பட்டை, கிராம்பு ஆகியவற்றை லேசாக அரைக்கவும். பிறகு அதிலே சின்ன வெங்காயம், தேங்காய், இஞ்சி பூண்டு ஆகியவற்றையும் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அரை ஸ்பூன் சோம்பு, பச்சை மிளகாய் கருவேப்பிலை ,சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும் .
வெங்காயத்தில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பிறகு அதிலே தக்காளியையும் சேர்த்து நன்கு மசிய வதக்கவும். இப்போது அரைத்த விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி விடவும் .பிறகு பலாக்கொட்டைகளை தோல் நீக்கி நறுக்கி சேர்த்து தேவையான அளவு தண்ணீரும் உப்பும் சேர்த்து கலந்து விடவும்.
இப்போது அந்த பலாக்கொட்டைகள் நன்கு வேகும் வரை வேக வைத்துக் கொள்ளவும். பலாக்கொட்டைகள் நன்கு வெந்து எண்ணெய் பிரிந்து வந்த பிறகு அதில் சிறிதளவு கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான பலாக்கொட்டை குழம்பு தயாராகிவிடும்.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…