#Babycare : குழந்தைகளின் உச்சிக்குழி குறித்து இதுவரை நீங்கள் அறிந்திராத உண்மைகள் இதோ..!

baby

குழந்தைகள் பிறந்தவுடனேயே அவர்களை மிகவும் பாதுகாப்பாக தான் வைத்திருப்பார்கள். அதிலும் முக்கியமாக உச்சிக்குழியை மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். உச்சிக்குழி என்பது தலையின் உச்சியில் உள்ள ஒரு சிறிய, மென்மையான பகுதியாக உள்ளது.

பிறந்த குழந்தைகள் அனைவருக்குமே இந்த உச்சிச்சிக்குழி மிகவும் மென்மையாக தான் காணப்படும். இந்த உச்சிக்குழி குழந்தைகள் வளரும் போது, ஒரு வயது அல்லது ஒன்றரை வயதுக்குள் எலும்புகளால் மூடப்பட்டுவிடும். இது குழந்தையின் Soft Spot என கூறப்படுகிறது.

உச்சிக்குழியின் அளவு குழந்தைகளை பொருத்து மாறுபடும். சில குழந்தைகளில் உச்சிக்குழி சிறியதாக இருக்கும், மற்ற குழந்தைகளில் பெரியதாக இருக்கும். உச்சிக்குழியின் அளவு குழந்தையின் மூளையின் அளவு மற்றும் வடிவத்தைப் பொறுத்தது.

குழந்தையின் தலையில் நான்கு பகுதியை சுற்றிலும், எலும்புகள் காணப்படும், தலையின் நடுப்பகுதியில் சிறிய பள்ளம் காணப்படும். அது தோள்களினால் மூடப்பட்டிருக்கும். அந்த தோல்களுக்கு கீழ் நேரடியாக குழந்தையின் மூளை காணப்படும். அதனை தொட்டுப்பார்த்தால் துடிப்பு தெரியும்.

சில சமயங்களில் மூளையில் ஏதேனும் கிருமி தொற்று காணப்பட்டால், குழந்தையின் உச்சிக்குழி வீங்கி விடும். அதேபோல் உச்சிக்குழி மிகவும் பள்ளமாக காணப்பட்டால், உடலில் நீர்சத்து குறைவாக காணப்படுகிறது என அறிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனை ஏற்பட்டால், இவ்வாறு காணப்படும்.

சிலரது வீடுகளில் குழந்தைகளின் உச்சிக்குழியை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக, அதில் குங்குமம், மஞ்சள், விபூதி போன்றவற்றை வைப்பார்கள். இப்படி செய்வது குழந்தைகளுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும். இப்படி செய்வதால், உச்சிக்குழியின் மேல் உள்ள தோலில் அலர்ஜி ஏற்பட்டு, மிகவும் எளிதாக மூளையில் infection ஆக வாய்ப்புள்ளது.

அடுத்தாக உச்சிக்குழி மூடியபின்பு தான் மொட்டையடிக்க வேண்டும் என கூறுவார்கள். உச்சிக்குழி மூடுவதற்கு, மொட்டையடிப்பதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. எனவே குழந்தை பிறந்து 2 மாதத்தில் இருந்தே மொட்டையடிக்கலாம்.

அதேசமயம் உச்சிக்குழி ஒன்றரை வயதாகியும் மூடாமலே இருக்கிறது என்றால், ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருத்தால், இரும்புசத்து, கால்சியம், வைட்டமின் D குறைவாக காணப்படுவது உச்சிக்குழி மூட சற்று காலதாமதம் ஆகலாம். இப்படிப்பட்ட சமயங்களில் மருத்துவரை அணுகி அதற்கான தீர்வுகளை காணலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்