அடடே!தக்காளியை வைத்து இப்படி கூட செய்யலாமா?..

Tomato jam

தக்காளியை வைத்து பலவிதமான உணவுகளை செய்திருப்போம் கார வகை உணவுகளில் இருந்து இனிப்பு பண்டமான தக்காளி அல்வா வரை என அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த அளவுக்கு தக்காளி நம் உணவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் தக்காளியை வைத்து ஜாம் வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்ப்போம்.

பெரும்பாலும் திருமண வீடுகளில் மட்டன் பிரியாணி போன்ற பிரியாணி உணவுகளுக்கு இணை உணவாக இந்த தக்காளி ஜாம் வைக்கப்படும். ஆனால் இதை பெரும்பாலும் வீடுகளில் செய்திருக்க மாட்டோம். இந்த தக்காளி ஜாம் செய்ய குறைவான நேரமும் குறைவான பொருட்களை வைத்தும் மிக எளிமையாக செய்து முடித்து விடலாம்.

தேவையான பொருட்கள்

தக்காளி= அரை கிலோ
நெய்= நான்கு ஸ்பூன்
பட்டை= இரண்டு
கிராம்பு= இரண்டு
பேரிச்சம்பழம்= 10
சர்க்கரை= 200 கிராம்
உலர் திராட்சை= 10
முந்திரி= பத்து
ஏலக்காய்= ஒரு ஸ்பூன்

செய்முறை

தக்காளியை நன்றாக கழுவி சுத்தம் செய்து சுடு தண்ணீரில் வேகவைத்து கொள்ளவும். தக்காளியின் தோல் பிரிந்து வரும் அளவிற்கு வேகவைக்கவும். பிறகு  கைகளாலே மசிந்து விட வேண்டும். மிக்ஸியில் அரைப்பதை விட கைகளில் மசிந்து  விட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.

ஒரு பாத்திரத்தில் நெய் இரண்டு ஸ்பூன் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு ,முந்திரி, உலர் திராட்சை வறுக்கவும். பிறகு பேரிச்சம்பழம் சேர்த்து வேக விடவும். அதன் பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளியையும் சேர்த்து கிளறி சர்க்கரையும் சேர்க்கவும். இப்போது அது கெட்டியாக வரும் அளவிற்கு கிளறி விடவும். இறக்கும் சமயத்தில் ஏலக்காய் தூள் மற்றும் இரண்டு ஸ்பூன் நெய்சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும். இப்போது சுவையான தக்காளி ஜாம் ரெடி.

நன்மைகள் 

தக்காளியில் விட்டமின் ஏ மற்றும் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது சருமத்தை பாதுகாப்பாகவும் இளமையாகவும் வைத்துக் கொள்ளும். தோளில் உள்ள பழைய செல்களை நீக்கி புது செல்களை  உருவாக்கும்.

தக்காளியை நாம் அதிகம் எடுத்துக் கொண்டால் அதிலுள்ள ஆக்சலேட் சிறுநீரக கற்களை ஏற்படுத்தும்.மேலும் பித்தத்தையும் அதிகரிக்கும்  அதனால் குறைவாக அளவோடு பயன்படுத்துவதே சிறந்தது.

பிரட் சாப்பிடும் போது கடைகளில் வாங்கும் ஜாமை பயன்படுத்துவதை விட இது மாதிரி வீட்டிலேயே செய்து பயன்படுத்தினால் ஆரோக்கியமாகவும் சுகாதாரமாகவும் இருக்கும். தக்காளி குறைந்த விலையில் கிடைக்கும் போதே இவ்வாறு செய்து குளிர்சாதன பெட்டியில் வைத்து விட்டால் 20 நாட்கள் வரை பயன்படுத்தலாம் அது மட்டுமல்லாமல் பிரியாணி செய்தால் அதற்கு  இணை உணவாகவும் இந்த ஜாமை வைத்து சாப்பிட்டு மகிழலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்