உங்க முகத்தில் மங்கு இருக்குதுன்னு கவலையா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..

FaceBeautyTips

அழகு என்பது அகப்பையில் இருந்து வருவது தான். நம் அகம் எவ்வாறு உள்ளது என்பதை அறிய நம் முகம், நகம், கூந்தல் மூலம் புரிந்து கொள்ளலாம். அந்த வகையில் இன்று முகத்தில் மங்கு ஏன் வருகிறது அதை எவ்வாறு குணப்படுத்தலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

மாதவிடாய் நிற்கும் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அது மட்டும் இல்லாமல் கர்ப்ப காலத்திலும், ஸ்டீராய்டு மருந்து மற்றும் கெமிக்கல் சார்ந்த ஹேர் டை பயன்படுத்தும் போதும் ஏற்படும் குறிப்பாக ஹார்மோன் குறைபாடு ஏற்படும்போது வரும். மெலனின் அதிகமாக சுரக்கும் போதும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கர்ப்பப்பையில் ஏதேனும் தொந்தரவு இருந்தால் இந்த மங்கு முகத்தில் ஏற்படும். கர்ப்ப காலத்தில் ஏன் வருகிறது என்றால் ஈஸ்ட்ரோஜன் ப்ரொஜெஸ்ட்ரோசன் அதிகமாக சுரக்கும் அதனால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் குழந்தை பிறந்த பின்பு இது சரியாகிவிடும்.

ஹேர் டை பயன்படுத்தும்போது நெற்றியில் வாஸ்லின்  தடவிக் கொண்டு பிறகு பயன்படுத்தினால் மேலிருந்து நெற்றியில் இறங்குவதை தடுக்கலாம்.இரண்டு ஸ்பூன் தேனில் மஞ்சள், பன்னீர் ரோஸ் பொடி, கருஞ்சீரக தைலம் மூன்று சொட்டு கலந்து மங்கு இருக்கும் இடத்தில் தடவி மூன்று மாதங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் குணமாகும்.
ஓரிதழ் தாமரை பொடி ஆவாரம் பூ பொடி சம அளவு எடுத்து அதில் லெமன் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு உள்ள இடத்தில் தடவி வரவும்.

தக்காளி ஜூஸ் உடன் உப்பு சேர்த்து ஜூஸாக எடுத்துக் கொள்ளலாம் தக்காளியில் முகத்தை பொலிவாக்கும் தன்மை உள்ளது இது செல்களை புதுமைப்படுத்தும்.
உருளைக்கிழங்கை பேஸ்ட்டாக அரைத்து அதை குளிர்சாதன பெட்டியில்   வைத்து முகத்தில் அடிக்கடி மசாஜ் செய்து வரவும் .

உருளைக்கிழங்கு பேஸ்ட் கற்றாழை ஜெல், லெமன் சாறு , கால் ஸ்பூன் மைதா கலந்து முகத்தில் தடவி வரவும். உருளைக்கிழங்கை சாறு எடுத்து அதில் அரிசி மாவு ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் கலந்து முகத்தில் மங்கு  இருக்கும் இடத்தில் தடவி வரவும்.

ஹார்மோன் தொந்தரவு இருப்பவர்கள் அதை குணமாக மருத்துவரை கட்டாயம் அணுக வேண்டும். எனவே அகத்தின் அழகு முகத்தில் தெரியும். நம் அகத்தை  சுத்தமாக வைத்திருந்தால் குறிப்பாக வயிற்றுப் பகுதியை சுத்தமாக வைத்திருந்தால் முகத்திலும், சருமத்திலும், முடியிலும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. மேற்கண்ட குறிப்புகளை பயன்படுத்தி சருமத்தை பொலிவாகவும் அழகாகவும் வைத்திருப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்