Dressing : வெளியில் வேலைக்கு செல்லும் பெண்களா நீங்கள்..? அப்ப கண்டிப்பா இதை படிங்க..!
இன்று ஆண்களுக்கு சமமாக, பெண்களும் அனைத்து துறைகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். அந்த வகையில் பெண்கள் வேலைக்கு சென்றாலும், பலவகையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். பெண்களை பொறுத்தவரையில், அவர்கள் அணியும் உடை தான் அவர்களை ஒவ்வொரு இடங்களிலும் அவர்களது மதிப்பை நிர்ணயிக்கிறது.
அந்த வகையில், வேலைக்கு செல்லும் பெண்கள் அணிந்து செல்லும் உடைகள் கண்ணியம் மற்றும் தனித்துவத்தை வெளிப்படுத்த வேண்டும். அவர்கள் அணியும் உடை அவர்களது நடத்தையை எளிதாக்க வேண்டும். அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடாது. பெண்கள் இறுக்கமாகவோ அல்லது மிகவும் தளர்வானவோ இருக்கக்கூடாது. அதேசமயம் உடைகள் சுத்தம் மற்றும் நேர்த்தியாக இருக்க வேண்டும்.
சேலை என்பது இந்திய பெண்கள் பொதுவாக அணியும் ஒரு பாரம்பரிய உடை ஆகும். இந்த உடை பெண்களை அழகான மற்றும் கண்ணியமிக்க நபராக பிரதிபலிக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் பணி மற்றும் பணிச்சூழலுக்கு ஏற்ற உடைகளை அணிந்து செல்வது மிகவும் நல்லது.
குறிப்பாக பெண்கள் கவர்ச்சியான உடைகள் அணிவதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் உடை கட்டுப்பாடுகளை அறிந்து கொண்டு, அதற்க்கேற்றவாறு உடை அணிந்து செல்வது மிகவும் நல்லது. உங்கள் உடைகள் உங்கள் தொழில்முறை தோற்றத்தை பாதிக்காமல் இருக்க வேண்டும். உங்கள் உடை தான் உங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்தும் என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.