கழிவறைக்கு செல்லும் பொழுது தொலைபேசி எடுத்து செல்பவர்களா நீங்கள்…? இதை படியுங்கள்!
செல்போன்- முன்பெல்லாம் கழிவறைக்குச் செல்லும் பொழுது கையில் தொலைபேசியுடன் சென்றாலே அனைவரும் கேள்வி எழுப்பக் கூடிய ஒரு விஷயமாக இருந்தது. ஆனால், தற்பொழுது வீடுகளுக்குள்ளேயே தனி கழிவறைகள் இருப்பதால் ஆண்கள் பெண்கள் இருவருமே கழிவறைக்குச் செல்லும் பொழுது தொலைபேசி எடுத்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அண்மைய கணக்கெடுப்பின்படி 90% பேர் கழிவறை செல்லும் பொழுது தொலைபேசியை கையில் எடுத்துச் செல்லும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. இவ்வாறு கழிவறைக்கு தொலைபேசி எடுத்து செல்வதால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
கிருமி தொற்று
கழிவறைக்கு தொலைபேசி எடுத்து செல்பவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் ஏற்கனவே கழிவறை ஒரு கிருமி நிறைந்த இடம் தான். நாம் கழிவறைக்கு தொலைபேசியை எடுத்து செல்லும் பொழுது நமது உடலில் கிருமிகள் அதிக அளவில் பரவுவதற்கு வாய்ப்பாக இருக்கும். ஏனென்றால் நமது தொலைபேசியிலும் கிருமிகள் அதிக அளவில் இருக்கும்.
நாம் தொலைபேசியை கையில் வைத்துக்கொண்டே கழிவறையில் இருக்கும்பொழுது அந்த கிருமிகள் நம்மை தாக்கி விடும். குறிப்பாக சால்மோனல்லா மற்றும் ஈகோலி ஆகிய கிருமிகள் நம்மை நோய் வாய்ப்படுத்தும்.
மூல நோய்
கழிவறைக்கு தொலைபேசி எடுத்து செல்வதால் எவ்வளவு நேரம் கழிவறையில் இருக்கிறோம் என்பது கூட தெரியாமல் அங்கு அமர்ந்திருப்போம். அதற்கு என்ன? என்று நினைக்க வேண்டாம். ஏனென்றால் நமது வயிற்றில் தேவையற்ற அழுத்தம் உருவாகும்.
இதன் காரணமாக இது மூல நோயை உருவாக்கும் அபாயம் உள்ளது. அது மட்டுமல்லாமல் வாயு பிரச்சனை கொண்டவராக இருந்தால், உடலில் அதிக அளவில் அழுத்தம் உருவாகி, வயிறு சம்பந்தமான பல பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.
நேரம்
நாம் தொலைபேசியுடன் கழிவறைக்கு செல்லும் பொழுது அதிக நேரத்தைச் செலவிடுகிறோம். தொலைபேசியுடன் கழிவறைக்கு செல்பவர்கள் கவனித்துப் பாருங்கள். நீங்கள் தொலைபேசியுடன் கழிவறைக்கு சென்றால் நிச்சயம் இருமடங்காக நேரம் எடுத்து கொள்வீர்கள். எனவே நாம் நமது முக்கியமான வேலைகளைச் செய்வதற்கான நேரங்களை இழந்துவிடுகிறோம்.