இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த கஷ்டப்படுகிறீர்களா..? அப்ப இந்த பதிவு உங்களுக்காகத்தான்…!
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் பாலக் கீரை பச்சடி.
இன்று பெரும்பாலானோருக்கு நீரிழிவு பிரச்சினை காணப்படுகிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நீரிழிவு பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு, இரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது இது பல பக்க விளைவுகளை ஏற்படுகிறது. எனவே ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நமது உணவு மற்றும் வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் தேவையாக இருக்கிறது.
இது குறித்து ஜஸ்லோக் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மூத்த உணவு நிபுணர் டாக்டர் ஜோதி பட் கூறுகையில், நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள், நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது முக்கியமானதாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த பதிவில் நமது உடலில் நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தக்கூடிய பாலக் கீரை கிச்சடி ரெசிபிகள் பற்றி பார்ப்போம்.
பாலக் கீரை கிச்சடி
கீரை வகைகள் அனைத்திலுமே நமது உடலுக்கு தேவையான பல வகையான .சத்துக்கள் உள்ளது. அந்த வகையில், பாலக் கீரையை கிச்சடி போன்று சமைத்து சாப்பிடலாம். இந்த கிச்சடி ரெசிபியில் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இது சத்தானது மற்றும் இந்த கிச்சடியை மதிய உணவு அல்லது இரவு உணவாக சாப்பிடலாம்.
தேவையானவை
- அரிசி – 1 கப்
- பருப்பு – 50 கிராம்
- நெய் – தேவையான அளவு
- இஞ்சி – சிறுதுண்டு
- பச்சை மிளகாய் – 2
- தக்காளி – 1
- உப்பு – தேவையான அளவு
- மஞ்சள் – சிறிதளவு
- கரம் மசாலா – தேவையான அளவு
- சர்க்கரை – சிறிதளவு
- மிளகு தூள் – காரத்திற்கேற்றவாறு
செய்முறை
அரிசி மற்றும் பருப்பைக் கழுவி 45 நிமிடங்கள் ஊற வைக்கவும். தண்ணீரை வடிகட்டி, பிரஷர் குக்கரில் 4 கப் தண்ணீர் சேர்க்கவும். கொதிக்க வைக்கவும். 1வது விசில் வந்த பிறகு தீயை மிதமாக வைக்கவும். ஆறியதும் நன்றாக மசிக்க வேண்டும். இதற்கிடையில், கீரையை சுத்தம் செய்து நறுக்கி, 1 கப் அளந்து, சில துளிகள் எண்ணெயுடன் வதக்க வேண்டும்.
வதக்கிய கீரையை ஆறவைத்து சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்டாக அரைக்க வேண்டும். ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடாக்கி, சீரகத்துடன் தாளிக்க வேண்டும். தொடர்ந்து அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் சிறிது உப்பு சேர்க்கவும். அதன் பிறகு மஞ்சள், சர்க்கரை, கரம் மசாலா, மிளகுத் தூள் சேர்த்து, மிதமான தீயில் 1 அல்லது 2 நிமிடங்கள் வேக விட வேண்டும். பின் மசித்த அரிசி மற்றும் பருப்புடன் தேவையான உப்பு சேர்த்து கீரை கலவையை சேர்த்து நன்கு கிளறி இறக்க வேண்டும். இப்பொது சத்தான சுவையான பாலக் கீரை பச்சடி தயார்.