மதிய உணவை தாமதமாக சாப்பிடும் பழக்கமுடையவரா நீங்கள்..? அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு..!

food

நாம் நமது அன்றாட வாழ்வில் பலவகையான வேளைகளில் ஈடுபடுகிறோம். நான் நமது கடமைகளில் எவ்வாறு சரியாக இருக்க வேண்டும் என கருதுகிறோமோ அப்படி தான், நமது உணவு முறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். நமக்கு பசிக்கும் போது உணவு உட்கொண்டால் போதும் என நினைக்க கூடாது. காலை, மதியம், இரவு என 3 வேலையும் சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ள வேண்டும்.

EAT drinking water
EAT drinking water [Image source: file image ]
நாம் உணவு உட்கொள்ளுதலில் கவனம் செலுத்தாமல், தாமதமாக உணவு உட்கொள்ளுவது நமது உடலில் பலவகையான பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கிறது. குறிப்பாக ஆரோக்கியமான மற்றும் சத்தான மதிய உணவை உட்கொள்வது முக்கியமானது. இது நாள் முழுவதும் நீங்கள் செய்யும் செயல்களுக்கு ஆற்றலை வழங்க உதவுகிறது. பலர் தங்களது வேலை பளு காரணமாக தாமதமாக சாப்பிடுகிறார்கள் அல்லது முற்றிலும் தவிர்க்கிறார்கள். சரியான நேரத்தில் மதிய உணவு சாப்பிடாதது பெரும்பாலும் தலைவலி, வாயு பிரச்சனையை ஏற்படுத்தும்.

ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் இதுகுறித்து கூறுகையில், மதிய உணவு சாப்பிடுவதற்கு உகந்த நேரம் இரவு 11 முதல் 1 மணி வரை என்று கூறுகிறார். அதே சமயம் மத்திய உணவு தாமதமாக சாப்பிடும் போது ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

தண்ணீரை பருகுங்கள் 

drinking water
drinking water [Image source : Nutritious Life]
மதிய உணவை தாமதமாக சாப்பிடும் பழக்கம் உடையவர்கள் தண்ணீரை மெதுவாக அருந்துமாறு பரிந்துரைக்கிறார்.

பழங்கள் சாப்பிடுங்கள் 

watermelon
watermelon [Image source : wellplated ]
மதிய உணவு சாப்பிட்ட பின், வாழைப்பழம், பப்பாளி, தர்பூசணி போன்ற பழங்களை சாப்பிடலாம். உங்களிடம் பழம் இல்லையென்றால், சில பேரீச்சம்பழங்களையும் சாப்பிடலாம்.

வெல்லம் 

தாமதமான மதிய உணவை சாப்பிட்டால், சாப்பிட்ட பின் சிறிது வெல்லம் சாப்பிடலாம் என பரிந்துரைக்கிறார். தேவையற்ற தலைவலி, வாயு மற்றும் அமிலத்தன்மையைத் தடுக்க இந்த வழிமுறைகள் உதவும் என நிபுணர் தெரிவிக்கிறார். அதிகப்படியான பிரச்சனைகள் ஏற்படும் போது மருத்துவர்களை அணுகுவது நல்லது. அதே சமயம் நாம் உணவில் கவனம் செலுத்தி தாமதமாக சாப்பிடுவதை தவிர்த்து, சரியான நேரத்திற்கு சாப்பிட முயற்சி செய்வது சிறந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்