உங்க வீட்டுக்கு பெயிண்டிங் பண்ண போறீங்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!
Painting idea-ஓவ்வொரு நிறங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது அது என்னவென்று இப்பதிவில் காண்போம்.
வண்ணங்களுக்கு ஏற்றார் போல் தான் நம் எண்ணங்களும் பிரதிபலிக்கும். ஆமாங்க.. நம் மனநிலையை மாற்றும் தன்மை கூட நிறங்களுக்கு உண்டு.ஒவ்வொரு நிறங்களை பார்க்கும் போதும் நம் மனம் மாறுபடும்.
சிவப்பு:
சிவப்பு நிறத்தை பார்க்கும் போது தூண்டுதல் ஏற்படும். இந்த நிறத்தை புதுமண தம்பதிகளின் அறையில் பயன்படுத்தலாம். சமையலறையில் பார்டரில் சிவப்பு நிறத்தில் கொடுத்துவிட்டு சுவற்றில் பச்சை வண்ணம் பூசலாம். மேலும் குழந்தைகளின் அறையில் இந்த நிறத்தை தவிர்க்கவும்.
மஞ்சள்:
மஞ்சள் நிறம் மங்களகரமானதாகவும், புத்தி கூர்மையை கொடுப்பதும், நிலையான மனது, வெளிப்படை தன்மை, செல்வம் போன்றவற்றை குறிக்கும். சிறிய வீடுகளில் வசிப்பவர்கள் வெளிப்பகுதியில் கொடுத்தால் வீட்டை பெரிதாக காட்டும்.
அதுபோல் சிறிய அறைகளுக்கும் கொடுத்துக் கொள்ளலாம். குழந்தைகளின் அறைகளுக்கு மஞ்சள் நிறத்தை கொடுக்கும் போது அவர்களின் புத்தி கூர்மையாக இருக்கும்.
பச்சை:
பச்சை நிறம் அமைதியையும், சாந்தம், மகிழ்ச்சி, நேர்மறை எண்ணம் போன்றவற்றைக் கொடுக்கும். மேலும் மருத்துவமனைகளில் பச்சை வண்ணம் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கும்.
டாக்டர், நர்ஸ், பேஷண்ட் என பலரும் பச்சை வண்ண ஆடைகளை அணிந்திருப்பார்கள். மேலும் கம்ப்யூட்டர் வேலை செய்பவர்களின் அறைகளில் பச்சை வண்ணத்தை பயன்படுத்துவது நல்லது.
நீலம்:
நீல வண்ணம் நேர்மறையான எண்ணத்தை தரும். பெரிய அறைகள் மற்றும் பாத்ரூம், மேற்கு சுவர்களில் நீல வண்ணத்தை பயன்படுத்தலாம்.
ஆரஞ்சு:
ஆரஞ்சு நிறத்தை சமையல் அறையில் பயன்படுத்துவது சிறப்பு. இது நம் மனதை சோர்வடையாமல் விழிப்போடு வைத்துக் கொள்ளும் .படுக்கை அறைகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வெள்ளை:
வெள்ளை நிறம் தூய்மை, சாந்தம், அமைதியை குறிக்கும். இதை மாடி படிக்கட்டுகள், மற்றும் வடமேற்கு பகுதிகளில் பயன்படுத்தலாம் , பல வாஸ்து நன்மைகளுக்கும் நல்லது. மேலும் வீட்டின் மேல் பகுதிகளில் பயன்படுத்தினால் காலையில் எழும்பொழுது சாந்த மனநிலையை தரும்.
ஆகவே நம் இல்லங்களுக்கு வண்ணங்களை தீட்டும் போது இதனை அறிந்து கொண்டு அறைகளுக்கு ஏற்ற வண்ணங்களை தேர்வு செய்து நம் மனநலத்தை மேம்படுத்துவோம்.