வெயில்ல வெளில போகப் போறீங்களா? அப்போ மறக்காம இதெல்லாம் எடுத்துட்டு போங்க..!

Published by
K Palaniammal

Summer tips-கோடை காலத்தில் நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

உலக சுகாதார நிறுவனம் :

  • புவி வெப்ப மையமாதலின் காரணமாக வெயிலின் அளவு சற்று தீவிரமாக இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து வருகிறது .
  • கொஞ்சம் கூட இரக்கம் காட்டாமல் வெளுத்து வாங்கும் வெயிலால் கர்ப்பிணிகள், குழந்தைகள், இணை நோயாளிகள் மற்றும் வெயிலின் உணர்வு இல்லாத மனநோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
  • 1998 முதல் 2017 ஆண்டுகளுக்கான கணக்கெடுப்பின்படி வெயிலின் தாக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 66 ஆயிரம் ஆகும். ஆகவே நாம் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.

வெளியில் செல்லும்போது எடுத்துச் செல்ல வேண்டியவை :

  • கண்டிப்பான முறையில் தலைக்கு தொப்பி அணிந்து கொள்ள வேண்டும். பருத்தி அல்லது லினன்  துணியால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை தான் பயன்படுத்த வேண்டும்.
  • மறக்காமல் தண்ணீர் கொண்டு செல்வது மிக அவசியம்.சூரிய கதிர்விச்சிலிருந்து கண்களை பாதுகாக்க சன் க்ளாஸ் அணிந்து கொள்ளவேண்டும் .செருப்பில்லாமல் நடப்பதை தவிர்க்கவும் .
  • வெளியில் செல்லும்போது குடை எடுத்து செல்ல வேண்டும், அதில் கருப்பு நிற குடைகளை தவிர்ப்பது நல்லது . கருப்பு நிறம் ஆனது வெப்பத்தை உள்வாங்கிக் கொள்ளும் தன்மை கொண்டது இதனை தவிர்த்து வெண்ணிற குடைகள் பயன்படுத்துவது நல்லது.

இரவு நேர வெப்பம்:

  • பகலில் மட்டுமே நாம் வெப்பத்தால் பாதிக்கப்படுகிறோம் என நினைக்கிறேன். இரவிலும் வெப்பம் அதிகமாக இருக்கும் நாம் தூங்குவதால் நமக்கு தெரிவதில்லை. எனவே இரவு நேரத்தில் தண்ணீர் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • குறிப்பாக நீர்மோர் மற்றும் உப்பு சக்கரை கரைசல் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டை விட்டு கிளம்பும்போதும் வெளியில் இருந்து வந்த பிறகும் உப்பு சர்க்கரை கரைசல் ஒரு டம்ளர் எடுத்துக் கொள்வது நம் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாத்துக்கொள்ளும்.
  • ஒரு ஈரத் துணியால் முகம் மற்றும் கழுத்து பகுதிகளை அடிக்கடி துடைக்க வேண்டும் ,இதனால் வேர்க்குரு மற்றும் சரும பிரச்சனைகள் வராமல் காத்துக் கொள்ளலாம்.
  • தினமும் 2.5யில்  இருந்து மூன்று லிட்டர் தண்ணீர் ஆவது நிச்சயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பெண்கள் தங்கள் சமையல் வேலைகளை சூரியன் வருவதற்கு முன்பே முடித்து விடுவது நல்லது. ஏனெனில் வெளியில் இருந்து வரும் வெப்பமும் அடுப்பில் இருந்து வரும் வெப்பமும் பெண்களுக்கு உடல் சூட்டை ஏற்படுத்தும்.
  • ஜன்னல் மற்றும் கதவுகளை பகலில் மூடி வைத்துவிட்டு இரவில் திறந்து வைத்தால் அறைகளுக்குள் வெப்ப காற்று வீசாமல் இருக்கும்.

ஆகவே இந்த கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வது அவசியம் முடிந்தவரை காலை 11 -4 மணி வரை  வெளியில் செல்வதை தவிர்க்கவும்.

Recent Posts

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…

13 hours ago

ஜானி மாஸ்டர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு.! விரைவில் கைது?

ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…

13 hours ago

அனல் பறக்கும் பிரியங்கா பிரச்சனை…மணிமேகலை போட்ட கெத்து பதிவு?

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே  நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…

13 hours ago

தனுஷ் விவகாரம்: ஃபெப்சி செயலுக்கு நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம்.!

சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…

13 hours ago

‘பத்து நிமிஷத்துல பஞ்சு போன்ற அப்பம்’: ட்ரை பண்ணி பாருங்க!

சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…

14 hours ago

ஐபிஎல் 2025 : “பஞ்சாப் அணிக்கு அடித்த ஜாக்பாட்”! பயிற்சியாளராக இணைந்தார் ரிக்கி பாண்டிங்!

சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…

14 hours ago