ஹேர் கலரிங் பண்ண போறீங்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..!

hair colour

Hair colour-ஹேர் கலரை பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் மற்றும் அதற்கான தீர்வுகளையும் இப்பதிவில் காணலாம்.

தற்போதெல்லாம் லேசாக நரைமுடி தெரிந்து விட்டாலே போதும் உடனடியாக ஹேர் கலரிங் செய்ய ஆரம்பித்து விடுகிறோம். பலரும் ஸ்டைலுக்காகவும் முடியை நிறமாற்றம் செய்கின்றனர் .மார்க்கெட்களில் பலவிதமான ஹேர் டை கிடைக்கிறது, இதில் 100% ரசாயனம் மட்டுமே உள்ளது.

முடியின் நிறத்திற்கு மெலனின் மற்றும் கரோட்டின் மிக முக்கியமாக  தேவைப்படுகிறது. விட்டமின் குறைபாடு, மன அழுத்தம் ,உடல் சூடு மற்றும் பரம்பரை என முடியின் நிற மாற்றத்திற்கு காரணமாக இருக்கிறது .

மார்க்கெட்டுகளில் கிடைக்கும் ஒரு சில ஹேர் டைகளில்  அம்மோனியா இல்லை என போடப்பட்டிருக்கும்,அதை கவனத்தில் கொள்ள வேண்டும். அம்மோனியா இல்லை என்றால்முடி நிறம்  மாற வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை. அம்மோனியாவின் அளவு குறைவாக இருக்கும்.

பக்க விளைவுகள்:

தொடர்ச்சியாக ஹேர் கலரிங் செய்யும்போது முடியின் வேர்க்கால்களில்  செதில் செதிலாக காணப்படுவது, அரிப்பு, நெற்றி பகுதி கருப்பாக மாறுதல், கண் வீங்குதல், தலைவலி, காது பகுதிகளில் கொப்புளங்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

குறிப்பாக இது உள்  உறுப்புகளுக்கும் கேடு விளைவிக்க கூடியது தான், மார்பக புற்றுநோய் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. கர்ப்பிணி பெண்கள் இதை பயன்படுத்தும் போது கருவில் உள்ள சிசுவிற்கு ஆபத்து மற்றும் கரு கலைப்பு உருவாக வாய்ப்புள்ளது.

ஹேர் டைனால் ஏற்படும் பாதிப்பு குறைய:

தேங்காய் எண்ணெயை இரவில் உச்சி முதல் முடியும் நுனி வரை தேய்த்து காலையில் குளித்து வரலாம். இதனால் பாதிப்பு குறைய வாய்ப்புள்ளது.சருமத்தில் தடிப்பு உள்ள இடத்திலும் பூசலாம் .

டீ ட்ரீ ஆயில் 3 ஸ்பூன் ,ஆலிவ் ஆயில் கால் ஸ்பூன் இரண்டையும் கலந்து லேசாக சூடாக்கி முடியின் வேர்க்கால்களில் மசாஜ்  செய்து காலையில் குளித்து வந்தால் ஹேர் டைனால் ஏற்படும் அலர்ஜி குறையும்.

புதினா இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நீரில் கொதிக்க வைத்து நீர் ஆறியதும் தலை முடியில் தடவவும்.இதனால் பெரிதளவான தாக்கம் குறையும் .

ஆகவே ரசாயனம் நிறைந்த ஹேர் டைகளை பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கையான முறையில் முடிகளை பராமரிப்பது தான் நல்லது.அழகு எந்த அளவுக்கு முக்கியமோ அதே நேரத்தில் நம்முடைய பாதுகாப்பும் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்