பழங்கள் வாங்க போறீங்களா.? அப்போ இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க..!
பழங்களை வாங்கும் போது அவற்றை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
பழங்களை வாங்கும் போது அவற்றை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை :பொதுவாக பழங்கள் சாப்பிட்டு வந்தால் நம் உடல் ஆரோக்கியம் மேம்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் அந்தப் பழங்களை நாம் வாங்கும் போது மேல் தோற்றத்தை பார்த்து ஏமாந்து விடுகிறோம். வெளியே பளபளப்பாகவும் உள்ளே கெட்டுப் போனதாகவும் சில சமயங்களில் இருக்க நேரிடும். இதனை தவிர்த்து பழங்களை பார்த்து வாங்குவது எப்படி என பார்க்கலாம்.
ஆப்பிள்:
ஆப்பிள் வாங்கும் போது அதன் நுனிப்பகுதியில் சுருக்கம் இல்லாமல் பச்சை நிறத்தில் இருக்க வேண்டும், இவ்வாறு இருப்பது ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். இதுவே நுனிப்பகுதி சுருங்கி சிவப்பு நிறத்தில் காணப்பட்டால் இரண்டு நாட்கள் வரை கெடாமல் இருக்கும். மேலும் ஆப்பிள் பளபளப்பாக இருந்தால் அதில் மேலாக மெழுகு தடவப்பட்டிருக்கும் .அதனால் லேசாக கீரி பார்த்து வாங்க வேண்டும்.
மாதுளை;
மாதுளைகளில் கர்நாடகா மற்றும் திண்டுக்கல்லில் இருந்து விலையும் பழங்கள் சுவையாகவும், ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் பழங்கள் சுவை குறைவாகவும் இருக்கும் .மாதுளை அதிக பிங்க் நிறத்தில் இருந்தால் அதில் சாயம் கலக்கப்படுகிறது .மேலும் அதன் மேல் தோலில் கரும்புள்ளிகள் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அது உள்ளே விரைவில் கெட்டுப்போக வாய்ப்பு உள்ளது.
திராட்சை;
கருப்பு திராட்சையில் அதிக அளவு பூச்சி மருந்துகள் தெளிக்கப்படுகிறது .இதனால் அதன் நிறம் சாம்பல் நிறமாக இருக்கும் அவ்வாறு இருந்தால் அவற்றை முடிந்தவரை வாங்குவதை தவிர்த்து விட வேண்டும் .ஒருவேளை வாங்கி விட்டால் அதனை மஞ்சள் தூள் மற்றும் உப்பு கலந்த நீரில் நன்கு கழுவி மீண்டும் ஐந்து முறை கழுவி பிறகு சாப்பிட வேண்டும். மேலும் திராட்சையின் காம்புகள் பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். திராட்சை பழத்தை தூக்கும் போது அதிலிருந்து பழங்கள் கீழே விழாமல் இருக்க வேண்டும்.
பப்பாளி பழம்;
பப்பாளி பழம் வாங்கும் பொழுது அதன் மேல் கீறல் இருக்கக் கூடாது. மேலும் விதை உள்ள பழங்களாக கேட்டு வாங்க வேண்டும்.
மாம்பழம்;
மாம்பழம் வாங்கும் பொழுது அதனை நுகர்ந்து பார்த்து வாங்க வேண்டும். மாம்பழத்தின் வாசனை வந்தால் அது இயற்கையாக பழுக்க வைக்கப்பட்டது இல்லையெனில் அது கல் வைத்து பழுக்க வைத்த பழமாக இருக்கும் .அதேபோல் அதன் மேல் தோலில் ஆங்காங்கே சொரசொரப்பாகவும் , கருமை நிறமும் படிந்திருக்க வேண்டும் .முழுவதுமாக ஒரே நிறமாக இருக்கக் கூடாது.
தர்பூசணி;
தர்பூசணி பெரிதாகவும் இல்லாமல், சிறிதாகவும் இல்லாமல் இருக்க வேண்டும். அதில் வெடிப்பு, கரும்புள்ளிகள் ,கீறல்கள் இல்லாமல் இருக்க வேண்டும் . தட்டிப் பார்த்தால் சத்தம் வரவேண்டும்.
ஆரஞ்சு;
ஆரஞ்சு பழம் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் அது கமலா ஆரஞ்சு ஆகும். இந்த ஆரஞ்சை மேல் மற்றும் கீழ் பகுதியை அழுத்தினால் கடினமாக இருக்க வேண்டும்.
அண்ணாச்சி பழம்;
அண்ணாச்சி பழத்தை வாங்கும் போது அதன் அடிப்பகுதி கனமாகவும் அதன் இலைப்பகுதி ஆங்காங்கே பழுப்பு நிறத்திலும் இருக்க வேண்டும். இவ்வாறு பழங்களை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.