PCOD பிரச்னையை எதிர்கொள்பவரா நீங்கள்..? அப்ப இந்த பதிவு உங்களுக்கு தான்…!

pcod

PCOD டயட்டில் சாப்பிடுவதற்கு நிபுணர்கள் பரிந்துரைக்கும் சில உணவுகள் மற்றும் பானங்கள்

PCOD என்பது பாலிசிஸ்டிக் கருப்பை நோய். இந்த நோயானது பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனையாகும். ஒரு நல்ல உடற்பயிற்சி முறை மற்றும் ஆரோக்கியமான உணவு முறை இந்த பிரச்சனையால் ஏற்படும் பக்க விளைவுகளை கட்டுப்படுத்தலாம்.

stomach
stomach [ImageSource : Representative]

PCOD பிரச்னை உள்ளவர்கள், ஒழுங்கற்ற மாதவிடாய், சோர்வு, முகப்பரு, முக முடி, அதிக இன்சுலின் எதிர்ப்பு மற்றும் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வர். காலையில் படுக்கையில் இருந்து எழுந்தது முதல் இரவு தூங்குவதற்கு படுக்கை அறைக்கு செல்லும் வரை, PCOD டயட்டில் சாப்பிடுவதற்கு நிபுணர்கள் பரிந்துரைக்கும் சில உணவுகள் மற்றும் பானங்கள் பற்றி பார்ப்போம்.

அதிகாலை பானம் வெறும் வயிற்றில் 1 கப் வெந்தய விதைகளை குடித்து உங்கள் நாளைத் தொடங்குங்கள். செரிமானத்தை எளிதாக்குவது மற்றும் எடை இழப்புக்கு உதவுவது தவிர, வெந்தய விதைகள் உடலில் இன்சுலின் வெளியீட்டை ஊக்குவிக்கும். காலை உணவு காலை உணவுக்கு புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

கொய்யா, கிவி, ஆப்பிள், பப்பாளி மற்றும் ஆரஞ்சு ஆகிய பழங்களில் இருந்து சாறு எடுத்து, ஜூஸ் போட்டு குடிக்கலாம். மதிய உணவில் கோதுமை மாவு மற்றும் ராகி மாவு கலவையுடன் தயாரிக்கப்பட்ட ரொட்டிகளை உட்கொள்ளலாம். மாலையில் பசி எடுக்கும் போது, 2 டீஸ்பூன் பூசணி விதைகளுடன் 2 வேகவைத்த முட்டையின் வெள்ளைக்கரு போன்றவற்றை உண்ணலாம். இஞ்சி இலவங்கப்பட்டை தேநீர் அருந்தலாம். இரவு நேரத்தில் மென்மையான உணவுகள் அல்லாது சூப்களை செய்து அருந்தலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்