அட இதுக்கெல்லாம் கூட நீங்க பயப்படுவீங்களா? பயத்தைப் போக்க நச்சுனு நான்கு டிப்ஸ்.!

Life style -பயத்தை போக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி இப்பதிவில் காணலாம்.
நாம் கோபப்படுகிறோம் என்றால் அதனால் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் ,ஆனால் பயம் நம்மையே பாதிக்கச் செய்யும். அது எப்படி என்றால் பயம் நம் தன்னம்பிக்கையை இழக்க செய்யும் .பயம் நமக்கு தைரியத்தை கொடுக்காததால் எந்த ஒரு புது முயற்சிகளிலும் ஈடுபட மாட்டோம் .
இதனால் பல இடங்களிலும் தோல்வியை தழுவுவீர்கள். பயத்தால் மனிதர்களை எதிர் கொள்ள தயங்குவீர்கள். உதாரணமாக ஒரு திருமண விழாவிற்கு செல்வதற்கோ அல்லது கூட்டமான இடங்களுக்கு செல்வதையோ தவிர்ப்பீர்கள் இதனால் உங்களுக்கு நண்பர்கள் வட்டாரம் பெருமளவில் இருக்காது. அதேபோல் வாய்ப்புகளும் உங்களுக்கு மிகக் குறைவாகத்தான் கிடைக்கும் .
மேலும் இங்கு பலருக்கும் எக்ஸாம் ஹாலுக்கு சென்றால் பயம், ரிசல்ட் வரும்போதும் பயம், இன்டர்வியூ செல்லும் போதும் பயம் இருக்கும். புதிதாக தொழில் தொடங்குவதற்கும் பயம் இப்படி அனைத்திற்குமே பயம் இருக்கும். இதில் உள்ள நன்மையும் தீமையையும் நாம் எதிர் கொள்ளத்தான் போகிறோம்.
பயம் நமக்கு இருக்க வேண்டும் தான் ,பயம் இருந்தால்தான் பொறுப்பு இருக்கும் அதன் மூலம் நாம் வாழ்க்கையில் வளர முடியும் .ஆனால் அது அளவுக்கு மீறி செல்லும்போது தான் வாழ்வாதாரமே பாதிப்படைய செய்து விடுகிறது.
பயத்தைப் போக்க என்ன செய்வது ?
எந்த விஷயத்தில் உங்களுக்கு பயம் இருக்கிறதோ அதை திரும்பத் திரும்ப செய்ய வேண்டும். உதாரணமாக நீங்கள் ஒரு இடத்திற்கு செல்ல பயப்படுகிறீர்கள் என்றால் அங்கு திரும்ப திரும்ப செல்லுங்கள் .அல்லது ஒரு நபரை சந்திக்க பயப்படுகிறீர்கள் என்றால் அந்த நபரை திரும்பத் திரும்ப சந்தியுங்கள் இவ்வாறு செய்யும்போது பயம் உங்களை விட்டு நீங்கும்.
பயத்தின் மூல காரணம் நமக்கு ஏதேனும் தப்பா நடந்திடுமோ என்ற எண்ணம் தான். உதாரணமாக எக்ஸாம் ரிசல்ட் காக காத்திருக்கும் போது பயம் வரும். அந்த சமயங்களில் வந்தா வரட்டும் பாத்துக்கலாம் என்று எண்ண துவங்குங்கள் தைரியமாக எதிர் கொள்ள தயாராக இருங்கள்.
ஒருவேளை நீங்கள் பெயில் ஆகி விடுவீர்கள் என்று பயம் இருந்தால் அப்படி நடந்தால் தான் என்ன ஆகிவிடும் என்று யோசித்துப் பாருங்கள்.. இப்படி நீங்கள் எதற்கெல்லாம் பயப்படுகிறீர்கள் என்று ஒரு பேப்பரில் எழுத துவங்குங்கள். அந்த விஷயங்களை வைத்து அப்படி நடந்தால் தான் என்ன ஆகப் போகிறது என்றும் யோசித்துக் கொள்ளுங்கள் .
எது நடந்தாலும் எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று யோசிக்க துவங்குங்கள் ,வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள். இவற்றை நீங்கள் சிந்தித்தாலே பயம் உங்களை விட்டு ஓடிவிடும்.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025