நீங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்பவரா..? அப்ப இதை கண்டிப்பா படிங்க..!

walking

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் உடற்பயிற்சி என்பது மிக முக்கியமான ஒன்று. குறிப்பாக தினமும் காலையில் எழுந்து நடைப்பயிற்சி மேற்கொள்வது மிகவும் முக்கியமானது ஆகும். நடைப்பயிற்சி உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம் ஆகும்.

தினசரி நடைப்பயிற்சி மேற்கோளாவது நல்லது. குறைந்தது வாரத்திற்கு 150 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்வது நல்லது. நடைப்பயிற்சி செய்பவர்கள் காலையிலேயே பூங்காக்களிலோ அல்லது வீட்டு முற்றத்திலோ என தங்களுக்கு  விருப்பமான இடத்திலோ நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.

நடைப்பயிற்சியின் நன்மைகள் 

உடல் எடை அதிகரிப்பு 

 உடல் பருமன் பிரச்னை உள்ளவர்களுக்கு நடைப்பயிற்சி ஒரு சிறந்த தீர்வு. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் காலை 20 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொண்டாலே, உடலில் உள்ள கலோரிகள் கரைந்து உடல் பருமன் குறைந்து விடும்.

இதய ஆரோக்கியம் 

இதயம் சம்பந்தமான பிரச்னை உள்ளவர்களுக்கு, நடைப்பயிற்சி மிகவும் அவசியமான ஒன்று. நடைப்பயிற்சி செய்வதன் மூலம், இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் குறைவதோடு, பக்கவாதம் போன்ற பிற நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.

எலும்பு வலுவடையும் 

தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது, பலவீனமான எலும்புகள் வலுவடையும். எலும்புகள் வலுவடைவதால், எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

மன ஆரோக்கியம் 

நடைப்பயிற்சி மேற்கொண்டால் முக்கியமாக, மன ஆரோக்கியம் மேம்படும். நடைப்பயிற்சி செய்வதன் மூலம், மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு குறைகிறது. நடைப்பயிற்சி செய்வதன் மூலம், சுய நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது.

நடைப்பயிற்சி மேற்கொள்வோர் கவனத்திற்கு 

நடைப்பயிற்சி செய்வதற்கு சிறந்த நேரம் காலை அல்லது மாலை, ஏனெனில் அப்போது வெப்பநிலை குறைவாக இருக்கும்  என்பதால் இந்நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது.

நடைப்பயிற்சியைத் தொடங்குவதற்கு முன், ஒரு மருத்துவரை அணுகி, நடைப்பயிற்சி மேற்கொள்ள உங்கள் உடல் ஏதுவாக உள்ளதா என அறிந்து கொள்ள வேண்டும். ஒரு நபருக்கு நடைப்பயிற்சி ஏற்றதா இல்லையா என மருத்துவர்கள் அறிவுரை வழங்குவார்கள்.

நடைப்பயிற்சி மேற்கொள்ள நடைப்பயிற்சிக்காக வடிவமைக்கப்பட்ட சரியான காலணிகளை அணிவது முக்கியம். உடனடியாக அதிக தூரம் அல்லது அதிக வேகத்தில் நடக்க முயற்சிக்க கூடாது. படிப்படியாக , வேகத்தையும், தூரத்தையும் அதிகரிக்க வேண்டும்.

 நடைப்பயிற்சி செய்யும் போது, ​​போதுமான நீர் ஆகாரங்களை குடிப்பது முக்கியம். நீண்ட தூரம் நடப்பதற்கு முன், போதுமான தூக்கம் உங்களது உடலுக்கு அவசியமானது. எனவே மேற்கண்ட வழிமுறைகளை கையாண்டு நடைப்பயிற்சி மேற்கொள்வது உடலுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்தும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்