Weight loss[File Image]
இன்று பெரும்பாலானோர் சந்திக்கின்ற மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை பிரச்சனை தான். இதற்கு காரணமா நமது உணவு பழக்க வழக்கங்கள் தான். நம்மில் பெரும்பாலானோர் பாஸ்ட் போன்ற உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகிறோம். இந்த உணவுகள் நமது நாவுக்கு சுவையாக இருந்தாலும், நமது உடலுக்கு பல்வேறு வகையில் தீங்கு விளைவிக்கும்.
அதாவது உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், உணவிலும், வாழ்க்கை முறையிலும் சில கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உணவு முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது முக்கியமானது ஆகும்.
தினசரி உணவில் ஓட்ஸ், சப்பாத்தி, பழங்கள், அதிக அளவு காய்கறிகளை எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் வயிற்றை நிரப்புவதோடு, உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். தற்போது இந்த பதிவில் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இரவில் என்ன சாப்பிட வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இரவு நேரத்தில் ஏழு மணிக்கு முன்பதாகவே உணவருந்துவது நல்லது. அதிலும் கோதுமையை வைத்து செய்யக்கூடிய தோசை, இட்லி, சப்பாத்தி போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
இந்த உணவுகளை அருந்திய பின் வெந்நீரை அருந்த வேண்டும். உணவு உட்கொண்ட பின்பு எந்த விதமான வேறு உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. பொதுவாகவே, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து அவித்த உணவுகளை சாப்பிடுவது நல்லது..
புரதச்சத்து நிறைந்த உணவுகள்: புரதம் உடலில் பசியை கட்டுப்படுத்த உதவும். இதனால், இரவில் அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கலாம். புரதச்சத்து நிறைந்த சில உணவுகள்: மீன், முட்டை, பால், பருப்பு வகைகள், டோஃபு, லெந்துல்ஸ் போன்றவை.
காய்கறிகள்: காய்கறிகள் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து நிறைந்தவை. இதனால், இரவில் சாப்பிடும்போது வயிறு நிறைவாக இருக்கும். காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
முழு தானியங்கள்: முழு தானியங்கள் நார்ச்சத்து நிறைந்தவை. இதனால், இரவில் சாப்பிடும்போது வயிறு நிறைவாக இருக்கும். முழு தானியங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
குறிப்பு:உங்கள் உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கவோ அல்லது உங்கள் உணவு பழக்க வழக்கங்களை மாற்றவோ முடிவு செய்வதற்கு முன்பு, தயவுசெய்து மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறுங்கள்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…
ஐரோப்பா : ஸ்பெயின் நாட்டில் நடந்த கார் ரேஸில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். கடந்த மாதம் துபாயில் நடந்த கார்…
தெலுங்கானா : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையின் நேற்று ஒரு பகுதி…
சென்னை : இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா VS பாகிஸ்தான் போட்டி துபாயில் நடைபெறுகிறது. துபாயில் பிற்பகல் 2.30 மணிக்கு…
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…