8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம்.
எட்டு வடிவ நடை பயிற்சி மேற்கொள்ள முதலில் சமமான பகுதியை தேர்வு செய்யவும். அது வீட்டிற்கு உள்ளேயோ அல்லது மாடியிலேயோ செய்து கொள்ளலாம்.
சிறிய இடமாக இருந்தால் ஆறுக்கு 12 அடியும், பெரிய இடமாக இருந்தால் எட்டுக்கு 16 அடியும் இருக்குமாறு செவ்வக வடிவில் முதலில் கோடிட்டுக் கொள்ளுங்கள். அதனுள் எட்டு வடிவத்தை வரைந்து கொள்ளவும்.
வடக்கு தெற்கு நோக்கி இருக்குமாறு வரைந்து கொள்ளவும். ஏனெனில் வடக்கு பகுதியில் இருந்து காந்த அலைகள் தெற்கு நோக்கி பாய்ந்துகொண்டிருக்கும் . கிழக்கு மேற்கு திசை நோக்கியும் வரைந்து கொள்ளலாம்.
ஆனால் அதன் பலன் முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால் வடக்கு தெற்கு தான் சரியான திசையாகும்.ஆண்கள் என்றால் வலப்புறமாகவும் ,பெண்கள் என்றால் இடப்புறமாகவும் நடையை தொடங்கவும் .
21 நிமிடம் வடக்கு நோக்கியும் ,21 நிமிடம் தெற்கு நோக்கியும் மொத்தம் 42 நிமிடம் நடை பயிற்சி மேற்கொள்ளவும் ..
மார்புச் சளி, மூக்குச்சளி மற்றும் நாசியில் உள்ள சளிகளை கரைத்து வெளியேற்றும். இந்த நடைப்பயிற்சியை செய்த சில நேரங்களில் கைகள் சிவந்து காணப்படும் .அப்படி இருந்தால் ரத்த ஓட்டம் சீராகிறது என அர்த்தம்.
தினமும் எட்டு வடிவ நடை பயிற்சியை செய்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும், சர்க்கரை நோயால் ஏற்படும் பாத எரிச்சல் குணமாகும். மேலும் பாத வெடிப்பு உள்ளவர்களுக்கும் வெடிப்பு விரைவில் குணமாக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் காலை மாலை என தினமும் இரு முறை ஒரு வருடத்திற்கு செய்து வந்தால் நீரிழிவு கட்டுக்குள் வரும்.
இந்த 8 வடிவத்தில் நடக்கும் போது நம் கண்கள் சுழற்சியாகும் .இதனால் கண்களுக்கு ரத்த ஓட்டம் நன்கு பாயும் ,இது பார்வை குறைபாடு வராமல் தடுக்கும் .அதுமட்டுமல்லாமல் கவனிக்கும் திறனும் மேம்படும் .
8 வடிவ நடை பயிற்சியின் மூலம் ஆகார சக்கரங்கள் சரியாக இயங்கி குடலிறக்கத்தை குணமாக்கும் . அது மட்டுமல்லாமல் சுவாசம் சீராகவும், மன அழுத்தம் குறையும், தூக்கமின்மை சரியாகும்.
இந்த பயிற்சியை தொடங்கிய சில நாட்களிலேயே நீங்கள் இவற்றையெல்லாம் உணரக்கூடும் ஏனென்றால் இது சித்தர்களால் கூறப்பட்ட உடற்பயிற்சியாகும்.
குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள், அறுவை சிகிச்சை செய்தவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புற்று நோயாளிகள் இந்த முறை பயிற்சியை தவிர்ப்பது நல்லது.
எனவே இவர்களை தவிர மற்ற அனைவரும் வயது வரம்பின்றி இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம் .
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…