நீங்கள் ஒரு குடும்ப பெண்ணா? வரவு செலவை திட்டமிடுவதில் உங்கள் பங்கு என்னவென்று தெரியுமா ?
ஒரு குடும்ப பெண்ணாக இருக்கும் பெண், தனது குடும்பத்தில் பல காரியங்களை மிகவும் கவனத்துடனும், ஞானத்துடனும் கையாள வேண்டிய கட்டயாத்திற்குள் உள்ளனர். அதிலும், முக்கியமான விடயம் என்னவென்றால், குடும்பத்தின் வரவு செலவு கணக்குகளை மிகவும் பக்குவமாக கையாள்வது தான்.
ஒரு குடும்பம் கடனில்லாமல் வாழ வேண்டும் என்றால், குடும்ப தலைவியாக இருக்கும் பெண்ணுக்கு அல்லது தலைவராக இருக்க கூடிய ஆணுக்கு சிக்கனம் என்பது தேவை. யாராவது ஒருவரிடம் சிக்கனம் இருந்தால் குடும்பம் முன்னேற்றத்தை காண இயலும். அவ்வாறு இல்லாத பட்சத்தில், ஆடம்பரம் என்கிற பெயரில் நாம் பெரிய கடனாளியாக மாறி விடுகிறோம்.
சேமிப்பு
பொதுவாக, குடும்பத்தின் வரவு, செலவை அதிகமாக பெண்கள் தான் கவனிப்பதுண்டு. அந்த வகையில் பெண்கள் சேமிப்பு என்கிற நல்ல பண்பினை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பணத்தை வீணாக செலவழிக்கலாம் , தேவைக்கு செலவழித்து மீதத்தை சேமித்து வைத்தால், இந்த சேமிப்பு பணம் நமக்கு பெரிய அளவில் உதவும்.
திட்டமிடுதல்
நமது கைகளில் வரும் பணத்தை கணக்கு பார்க்காமல் செலவழித்தால், நமக்கு எவ்வளவு பணம் எதற்காக செலவழித்தோம் என்பது தெரியாமல் போய்விடுகிறது. எனவே, கையில் பணம் வரும் போது, கணவன் மனைவி இருவருமே திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும். இது ஒரு சிறந்த பண்பும் கூட.