டிராகன் பழம் பிரியரா நீங்கள் ? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

dragon fruit

தற்போது கடைகளில் நம் கண்களை கவரக்கூடிய ஒரு பழம் டிராகன் ஆகும். இது ஒரு கற்றாழை வகையைச் சேர்ந்த பழமாகும். இந்த டிராகன் பழதில்  நிறைந்துள்ள சத்துக்கள் மற்றும் இதை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்று இந்த பதிவில் நாம் பார்ப்போம்.

சத்துக்கள்:
ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், விட்டமின் பி3, பி6 விட்டமின் சி, ஒமேகா 3 மற்றும் ஒமேகா 9 நார்ச்சத்து, பீட்டா கரோட்டின், இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளது.

இதயத்திற்கு நல்ல ஒரு பலத்தை கொடுக்கிறது. குறிப்பாக மாரடைப்பு வராமல் தடுக்கிறது. ரத்த அழுத்தத்தை குறைகிறது.

இதில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

  1. காயங்கள் வழியாக தொற்று ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்து போராடுகிறது.
  2. ப்ரோ பயாடிக் அதிகம் உள்ளதால் குடலுக்கு நல்ல பழத்தை கொடுக்கிறது. மேலும் கெட்ட பாக்டீரியாவை அழித்து நல்ல பாக்டீரியாவை உருவாக்குகிறது.
  3. 100 கிராம் பழத்தில் 60 கிராம் கலோரி நிறைந்துள்ளது. இதனால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இந்த பழத்தை ஒரு வேளை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
  4. சர்க்கரை நோய் அதிகமாக இருப்பவர்கள் கூட இந்த பழத்தை சாப்பிடலாம். ஏனென்றால் இது சர்க்கரையின் அளவை குறைக்கிறது.
  5. இதிலுள்ள கரோட்டினாய்ட்ஸ் கண் பார்வைக்கு  சிறந்தது. மேலும் இது உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடிய பழமாகும்.

பக்க விளைவுகள்:

பொதுவாக நாம் எந்த ஒரு உணவாக எடுத்துக் கொண்டாலும் அதில் நன்மைகளும் இருக்கும் தீமைகளும் இருக்கும் அந்த வகையில் இந்த பழத்தை நாம் அதிக அளவு எடுத்துக் கொள்ளும் போது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.

  • டிராகன் பழம் நம் உடலுக்கு மிகவும் நன்மை அளிக்கக் கூடியது. ஆனால் அதை அதிகமாக எடுத்துக் கொண்டால் ஒரு சிலருக்கு அலர்ஜி, தொண்டை அரிப்பு மற்றும் தொண்டை எரிச்சல் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • ரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர்கள் சாப்பிடவே கூடாது. மேலும் ரத்த சர்க்கரை அளவுகுறைவாக இருப்பவர்களும் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் மயக்கம் தலைசுற்றல் போன்றவற்றை ஏற்படுத்தும். சுய நினைவை கூட சில சமயங்களில் இலக்க நேரிடும்.
  • டிராகன் பலத்தை நாம் எடுத்துக் கொள்ளும் போது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனென்றால் சில நேரங்களில் சிறுநீர் இளம் சிவப்பு நிறத்தில் மாறும். இது உடலுக்கு ஆபத்தானதாகும்.
  • விட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் இருப்பதால் நாம் டிராகனை அதிக அளவு உட்கொள்ளும் போது நுரையீரலில் புற்றுநோயை கூட ஏற்படுத்தும்.
  • ரத்த கசிவு பக்கவாதம் போன்றவைகளையும் ஏற்படுத்தும். ஆகவே அளவோடு சாப்பிடுவது சிறந்ததாகும்.
  • கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் குறைவான அளவு எடுத்துக் கொள்வது நல்லது.
  • அறுவை சிகிச்சை செய்ய நினைப்பவர்கள் பத்து நாட்களுக்கு முன்பே இதை உட்கொள்வதை நிறுத்த வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்