தினமும் உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..
Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம்.
உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின் மகத்துவத்தை உணர்ந்தவர்கள் மட்டுமே தினமும் மேற்கொள்கின்றனர்.
உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்:
- காலையில் உடற்பயிற்சி செய்யும்போது பசியை தூண்டும். செரிமானம் சீராக செயல்படும். ரத்த ஓட்டமும் அனைத்து பாகங்களுக்கும் சீராகச் செல்லும்.உடல் ஆற்றல் அதிகமாகி நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கச் செய்யும்.
- எடை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலையில் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதனால் மெட்டபாலிசம் அதிகமாகி தேவையற்ற கலோரிகள் கரைக்கப்படுகிறது.
- தினமும் உடற்பயிற்சி செய்வதால் அதுவும் காலை நேரத்தில் செய்வதால் புத்தி கூர்மையாக செயல்படும். கவனிக்கும் திறன் அதிகரிக்கும்.
- மன அழுத்தம் ,மன இறுக்கம் உள்ளவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் .மன அழுத்தம் உள்ளவர்களுக்கு தூக்கம் பாதிக்கப்படும். இதனால் உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது இரவில் நல்ல தூக்கத்தை கொடுக்கும்.
- மேலும் மூளையில் வியாதிகள் வராமல் தடுக்கும். ஆக்சிடோஸின், செரட்டோனின் போன்றவை மூளையில் சுரப்பதால் மன பதட்டம் குறைந்து மகிழ்ச்சியை தூண்டும் .மேலும் தன்னம்பிக்கையும் அதிகப்படுத்தும்.
- ஆய்வின்படி மாலையில் உடற்பயிற்சி செய்வதை விட காலையில் செய்யும் போது நல்ல நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் பெற முடியும் என கண்டறிந்துள்ளனர் .அது எப்படி என்றால் நம் தசைகள் தளர்வடைய அதிக நேரம் தேவைப்படும் ,இதுவே மாலையில் உடற்பயிற்சி செய்யும் போது தசை தளர்வடையாமல் தூக்கமும் பாதிக்கப்படும்.
உடற்பயிற்சி மேற்கொள்வது சற்று கடினம் தான் அதற்காக நேரம் ஒதுக்க வேண்டும். ஒரு சிலருக்கு வேலை பளு மற்றும் சோம்பேறித்தனம் காரணமாக உடற்பயிற்சியை ஒதுக்கி விடுவார்கள் அவ்வாறு செய்வதை தவிர்க்க வேண்டும்.
முடிந்தவரை எளிமையான பயிற்சிகளான நடை பயிற்சி, ஜாக்கிங் போன்றவற்றையாவது அவசியம் செய்ய வேண்டும். 24 மணி நேரத்தில் உங்களுக்காக ஒரு நாளைக்கு அரை மணி நேரம் ஒதுக்குவதில் தவறில்லை.
உங்களின் உடல் நலமும், மனநலமும் ஆரோக்கியமாக இருக்க தினமும் காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளுங்கள். இதனால் பல நோய்கள் வராமல் தடுக்க முடியும்.