கால் மேல் கால் போட்டு உட்காருபவரா நீங்கள் ? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..

Published by
K Palaniammal

Chennai-கால் மேல் கால் போட்டு அமருவதால்  ஏற்படும் உடல்நல பிரச்சனைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி கால் மேல் கால் போட்டு அமரும் பழக்கம் சமீப காலமாக  அதிகரித்து விட்டது .அந்த காலத்தில் இவ்வாறு அமர்ந்தால் வீட்டில் உள்ள பெரியவர்கள் கண்டிப்பார்கள். மேலும் இது மரியாதை குறைவான பழக்கம் எனவும் கூறுவார்கள் .இதனால் உடல்நல கோளாறுகளை சந்திக்க நேரிடும் என அறிவியல் ரீதியாகவும் கூறப்படுகிறது.

கால் மேல் கால் போட்டு அமருவதால் ஏற்படும் உடல்நல கோளாறுகள் ;

ஒரு மணி நேரத்திற்கு மேல் இவ்வாறு அமர்ந்திருந்தால் பக்கவாதம்  ஏற்படவும்  வாய்ப்புள்ளது. இப்படி கால் மேல் கால் போட்டு அமர்வதை பற்றி 2010 ஆம் ஆண்டு ஆய்வுகள் நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் உடலில் ரத்த அழுத்தம் ஏற்பட வழிவகுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ரத்த அழுத்தம் சம்பந்தப்பட்ட வேறு இணை நோய்கள் ஏற்படவும் வழி வகுக்கின்றது. அது மட்டுமல்லாமல் ரத்த ஓட்டத்தை தடை செய்து ஆரோக்கியத்தை பாதிக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமருபவர்களுக்கு கீழ் உடல் பகுதியை விட மேல் உடல்  பகுதிகளுக்கு அதிக ரத்த சுழற்சி ஏற்படுகிறது .இதனால் இதயம் அதிகமாக பம்ப் செய்யும் சூழ்நிலை உருவாக்கப்படுகிறது. இதுவும் ரத்த ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. நீண்ட நேரமாக கால் மூட்டுகள் மற்றும் தசைகள் ஒரே நிலையில் இருப்பதால் கால்களுக்கு கீழ் ரத்த ஓட்டம் தடை செய்யப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இடுப்பின் சமநிலையும் பாதிக்கப்படுகிறது.

சில சமயங்களில் நரம்பு சுண்டி இழுக்கும் பிரச்சனை மற்றும் வெரிகோஸ் வெயின் என்ற நரம்பு பிரச்சனை வர முக்கிய காரணமாக இருக்க வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் அமரும் போது சிஸ்டாலிக்  ரத்த அழுத்தம்  அளவு ஏழு சதவீதமும் ,டயஸ்டாலிக் ரத்த அழுத்தம் அளவு இரண்டு சதவீதம் அதிகரிக்க கூடும் .

ஒரு நாளில் 3 மணி நேரத்திற்கு மேல் கால் மேல் கால் போட்டு உட்காருவதால் முதுகு வலி ,கால் வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும். மேலும் தொடர்ந்து 10 – 15 நிமிடங்கள் காலை குறுக்காக போட்டு அமரக்கூடாது என இதய நோய் நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் மற்றும் பெண்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பெண்கள் ஏன் இவ்வாறு அமர கூடாது தெரியுமா ?

பெண்கள் இவ்வாறு அமர்ந்தால் அவர்களை  திமிர் ,அகங்காரம், ஒழுக்கம் இல்லாதவள் என கூறுவதுண்டு, ஆனால் இதற்குப் பின்னால் ஒரு உட்பொருள் உள்ளது. நம் பெரியோர்கள் வார்த்தைக்குப் பின்னால் அறிவியல் இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெண்கள் இந்த நிலையில் அமர்ந்தால் அடிவயிற்றுப் பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதனால் கருப்பை கோளாறுகள் எளிதில் வர வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதனால் இனிமேலாவது கால் மேல் கால் போட்டு அமரும் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது.

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

3 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

4 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

5 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

6 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

8 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

9 hours ago