படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்.!
தூக்கத்தில் அறியாமல் சிறுநீர் கழிப்பதற்கு ஆங்கிலத்தில் bed wetting என்று மருத்துவர்கள் கூறுவார்கள். இது குழந்தை பருவத்தில் ஏற்படுவது இயல்புதான்.
சென்னை – தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதற்கான காரணத்தையும் அதற்கான தீர்வுகளையும் இந்த செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தூக்கத்தில் அறியாமல் சிறுநீர் கழிப்பதற்கு ஆங்கிலத்தில் bed wetting என்று மருத்துவர்கள் கூறுவார்கள். இது குழந்தை பருவத்தில் ஏற்படுவது இயல்புதான். ஏழு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த பழக்கம் 90% நின்று விடும் .ஆனால் சில குழந்தைகள் பத்து வயது ஆனாலும் தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதை நிறுத்த மாட்டார்கள் இதற்கு பல காரணங்கள் உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதற்கான காரணங்கள் ;
மனம் சார்ந்த பிரச்சனை ;
பயம் மற்றும் மன அழுத்தம் போன்ற காரணத்தால் குழந்தைகள் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கின்றனர். சிறுவயதிலிருந்தே பயம் அல்லது அவர்கள் மனம் புண்படும்படி பேசுதல் போன்ற சூழ்நிலையில் வளரும் குழந்தைகளுக்கு இந்த பழக்கம் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சிறுநீர் பைகள் வளர்ச்சி அடையாமல் இருப்பது ;
பொதுவாக ஏழு வயது ஆன பிறகு சிறுநீர் பைகள் முழு வளர்ச்சி அடைந்துவிடும் .இதில் சிறிது தாமதம் ஏற்படும் குழந்தைகளுக்கு தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கும்.சிறுநீர்ப்பையின் அளவு சிறிதாக இருப்பது அதாவது சிறுநீர்ப்பைகள் பருவம் அடைய அடைய மாற்றம் இருக்க வேண்டும் .சில குழந்தைகளுக்கு மாறாமல் சிறிதாகவே இருந்தால் சிறுநீர் தேக்கி வைக்கப்படும் தன்மை இருக்காது இதன் காரணமாகவும் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கும். அது மட்டுமல்லாமல் சிறுநீர் தொற்று இருக்கும் குழந்தைகளுக்கு சிறுநீரகப்பை பலம் இழந்ததாக இருக்கும் இந்த சூழலிலும் இந்த பிரச்சனைகள் ஏற்படும்.
சிறுநீர் கழிப்பதில் ஒழுங்கின்மை;
சிறு வயதிலிருந்தே அவர்கள் சிறுநீர் அடக்கி வைத்தல் மற்றும் தூங்குவதற்கு முன் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை அவர்களுக்கு கொண்டு வராமல் இருந்தாலும் இந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
நரம்பியல் பிரச்சனை;
சிறுநீர் கழிக்கும் உணர்வு நரம்பு வழியாக மூளைக்கு கடத்தப்படும் .ஆனால் நரம்பு மற்றும் தலை பிரச்சனை, தண்டுவட பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு இந்த சிக்னல் மூளைக்கு செல்லாததால் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் ஏற்படுகிறது.
சர்க்கரை நோய்;
டைப் 1 டயபடீஸ் குழந்தை பருவத்திலேயே இருந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கும் இது இரவு நேரத்தில் அதிகமாக இருக்கும் பட்சத்தில் இந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர் . மேலும் மரபு ரீதியாக அதாவது குழந்தையின் தாய் அல்லது தந்தையின் சிறுவயதில் மிக தாமதமாக சிறுநீர்ப்பை வளர்ச்சி இருக்கும் பட்சத்தில் குழந்தைகளுக்கும் அந்த காணப்படலாம் .
தீர்வுகள்;
மாலை நேரத்தில் இருந்தே தண்ணீர் குடிப்பதன் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். தூங்குவதற்கு முன் சிறுநீர் கழிப்பது அவசியமாக வைத்துக்கொள்ள வேண்டும் .மேலும் நடு ராத்திரியில் ஒரு முறை எழுந்து சிறுநீர் கழிக்கும்போது இந்த தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருப்பது குறையும். அது மட்டுமல்லாமல் இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் ஊக்கமளிக்கும் வார்த்தைகளால் பேச வேண்டும், இதற்கு மாறாக அடிப்பது இழிவான வார்த்தைகளால் திட்டுவது போன்றவற்றை செய்வதை தவிர்க்க வேண்டும்.
வீட்டு குறிப்புகள்;
கிரான்பெர்ரி [cranberry juice]ஜூஸ் ;
க்ரான்பெர்ரி ஜூஸ் தினமும் குடித்து வருவதால் சிறுநீர்ப்பைகள் வலிமைப்படுத்த படுகிறது . இது சிறுநீர்ப்பைகளில் உள்ள தசைகளையும் வலிமைப்படுத்துகிறது. இதனால் தூக்கத்தில் சிறுநீர் கழிப்பது நாளடைவில் குறைந்து விடும் .மேலும் யூரினரி ட்ராக் இன்பெக்சன் ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது.
பட்டை;
ஆயுர்வேத மருத்துவத்தில் படுக்கையில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு பட்டை மருந்தாக பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு துண்டு பட்டையை உமிழ்நூறுடன் மென்று சேர்த்து சாப்பிட்டு வர நாளடைவில் குறைந்து விடும். அதேபோல் ஆட்டுச்சுவரட்டியை சுட்டோ அல்லது சமைத்தோ சாப்பிட்டு வந்தாலும் குறைந்து விடும் .
எனவே மேற்குறிய காரணங்களை அறிந்துகொண்டு வீட்டு குறிப்புகளை பயன்படுத்தியும் இந்தப் பிரச்சனை இருந்து வந்தால்[10 வயதுக்கு மேல் ] சிறுநீரகவியல் மருத்துவரை அணுகுவதே சிறந்தது.