இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ?

இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளையும் அதன் செய்முறைகளையும் இந்த குறிப்பில் காணலாம்.

inji then (1)

சென்னை –இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளையும் அதன் செய்முறைகளையும் இந்த குறிப்பில் காணலாம்.

“காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு மாலையில் கடுக்காய் மண்டலம் உண்ண  கோலையூன்றி நடந்த கிழவனும் காலால் குளிக்கி நடப்பானே” என்ற சித்தர் கூறிய பாடலை நம்மில் பலரும் அறிந்திருப்போம். இதன் விளக்கம் என்னவென்றால் காலை நேரத்தில் இஞ்சியும், மதியம் சுக்கும் ,மாலையில் கடுக்காயும் சாப்பிட்டு வந்தால் வயதானாலும் தேகம் கம்பீரமாக இருக்கும் என்பதாகும் .அந்த வகையில் இஞ்சி தேன் செய்வது எப்படி என பார்க்கலாம் .

இஞ்சி தேன் செய்முறை;

150 கிராம் இஞ்சியை தோல் நீக்கி கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும் .பிறகு அவற்றை இட்லி பாத்திரத்தில் 20 – 30 நிமிடம் வேக வைத்து வெயிலில் ஒரு மணி நேரம் காய வைத்துக் கொள்ளவும் .பிறகு ஒரு கண்ணாடி பாட்டிலில் சேர்த்து அந்த இஞ்சி மூழ்கும் அளவிற்கு  தேன் சேர்த்து ஊற வைத்து விடவும். இதை மறுநாளும் சாப்பிடலாம் அல்லது பத்து நாள் கழித்தும் எடுத்துக் கொள்ளலாம். கட்டாயம் இந்த இஞ்சி தேனில்  தண்ணீர் படக்கூடாது.. மேலும் தேவைக்கேற்ப செய்து வைத்து பயன்படுத்தவும்.

இஞ்சி தேன் நன்மைகள்;

இஞ்சித்தேனை   தேன் ஊறல் ,  தேன் இஞ்சி என்றும் கூறுவார்கள்.. தினமும் ஒன்றிலிருந்து மூன்று துண்டுகள் காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எடுத்துக் கொள்ளலாம். தினமும் இஞ்சி தேன்  சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.கெட்ட கொழுப்பு குறையும், சுவாச பிரச்சனைகள் நீங்கும் என்று  மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக ஜீரண கோளாறு, பசியின்மை, வயிறு உப்பசம், வாந்தி போன்ற பிரச்சனை உள்ளவர்கள் தினமும் எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் உணவு செரிக்கும் தன்மையை உண்டாக்கும், நரைமுடி, தோல் சுருக்கம் ஆகியவற்றை தடுத்து முதுமையை தள்ளிப் போடவும் செய்யும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல்  பி காம்ப்ளக்ஸ் மாத்திரைகள் கொடுக்கும் பலனை விட ஆயிரம் மடங்கு இந்த இஞ்சி தேனுரல் கொடுக்கும் என்று நேச்சுரோபதி மற்றும் சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் ஜிஞ்ஜரால்  என்ற வேதிப்பொருள் இருப்பதால் உடலில் புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது. இஞ்சியை பலரும் தவறாக பயன்படுத்துகின்றனர் இஞ்சியை பச்சையாக சாப்பிடக்கூடாது. அதனால் இஞ்சியை தேனில் ஊற வைத்து தான் சாப்பிட வேண்டும்.

இந்த இஞ்சி தேனை  இயற்கையான சாக்லேட் என்றும் கூறுகின்றனர். குறிப்பாக சித்தமருத்துவத்தில்  இதை சிறந்த சிற்றுண்டியாகவும் கூறுகின்றனர். ஆகவே தேனின் இனிமையும் இஞ்சியின் ஆரோக்கிய குணமும் நிறைந்த இந்த இஞ்சி தேனுறலை சாப்பிட குழந்தைகளுக்கு பழக்கப்படுத்த வேண்டும் .இதுபோன்ற பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுத்தோமே ஆனால் வருங்கால சந்ததியினர் ஆரோக்கியமான வாழ்வை பெறுவார்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Lottery Martin - Kanguva
childrens day (1)
rinku singh
Vaiko - Apollo Hospital
doctor balaji
Rajeev gandhi co-operative hospital
kanguva review