நல்லெண்ணையில் வாய் கொப்பளித்தால் இவ்வளவு நன்மைகளா?..

நம்முடைய உடல் ஆரோக்கியமானது வாய் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது தான். ஏனெனில் நம் வாயானது உள் உறுப்புகளின் ஆரோக்கியத்தை பிரதிபலிக்க கூடியது.

sesame oil (1)

சென்னை –ஆயில் புல்லிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள், யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதைப் பற்றி மருத்துவர்கள் கூறும் தகவல்களை இப்பதிவில் அறியலாம்..

ஆயில் புல்லிங்[எண்ணெய் கொப்புளித்தல் ] என்பது பழங்கால ஆயுர்வேத சிகிச்சை முறையாகும். இந்த முறை 30 நோய்களுக்கு சிகிச்சையாக அளிக்கப்பட்டது என ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது.

ஆயில் புல்லிங் செய்யும் முறை;

காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் எண்ணெய்யை  வாயில்   வைத்து பத்து நிமிடங்கள் வரை மெதுவாக கொப்பளிக்க வேண்டும். பிறகு கட்டாயம் அதை கீழே துப்பி விட வேண்டும்.ஆரம்ப காலகட்டத்தில் இந்த முறையை செய்யும் பொழுது தலைவலி மற்றும் தாடை வழி ஏற்படலாம் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

ஆயில் புல்லிங் யாரெல்லாம் செய்யலாம்?

ஆயில் புல்லிங் ஐந்து வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள் முதல் அனைவருமே செய்யலாம்.நல்லெண்ணெய் ,தேங்காய் எண்ணெய்,சூரிய காந்தி எண்ணெய்  ,ஆலிவ் ஆயில் போன்ற எண்ணெய்களை கொண்டு வாய் கொப்புளிக்கலாம் என்றும்  இதில் நல்லெண்ணெய் மிக சிறந்ததாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர் .

ஆயில் புல்லிங் யார் செய்யக்கூடாது?

ஐந்து வயதிற்கு கீழ் உள்ளவர்கள் செய்யக்கூடாது. எண்ணெய்யால்  அலர்ஜி உள்ளவர்கள் தவிர்த்துக் கொள்வது நல்லது எனவும்  தாடை பிரச்சினை உள்ளவர்கள் குறைவான நேரம் செய்து கொள்ளலாம் என்று  பல் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் .

ஆயில் புல்லிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள்;

உமிழ் நீருக்கு என்று பி எச் மதிப்பு உள்ளது . அமிலத்தன்மை சமநிலையாக இருந்தால் தான் வாயில் பாக்டீரியா வளர்ச்சி சமநிலையாக  இருக்கும். இந்த ஆயில் புல்லிங் செய்யும்போது வாயில் பி எச் மதிப்பு சமநிலைபடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் அதை உறுதிப்படுத்தும் வகையில் டாக்டர் தீபா அருளாளன் தனது யூட்யூப்  பக்கத்தில் பல கருத்துக்களையும் கூறியுள்ளார். தினமும் ஆயில் புல்லிங் செய்வதால் பல் இடுக்கில் உள்ள அழுக்குகள் நீங்கும் .பல்லின் மேல் பகுதியில் இருக்கும் மஞ்சள் கறைகளை நீக்குகிறது.

சொத்தைப்பற்கள் வருவது தடுக்கப்படுகிறது .வாய்  துர்நாற்றம் நீங்கும். பல் ஈறுகளில் வீக்கம் ரத்த கசிவு வருவது தடுக்கப்பட்டு பல் ஈறுகள் வலிமைப்படுத்தப்படுகிறது. மேலும் பல் கூச்சம் வருவது குறைக்கப்படுகிறது .

உடல் சோர்வு நீங்கி  புத்துணர்ச்சி கிடைக்கும். வாய் வறட்சி ,உதடு வெடிப்பு போன்றவை குணமாகும் என்று  மருத்துவர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமில்லாமல் வாயில் உள்ள கிருமிகள் அழிக்கப்படுவதால் தாடைகள் வலுவாக்கப்பட்டு விரைவில் முகச்சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. வாய்ப்புண்கள் இருப்பவர்கள் தேங்காய் எண்ணெய் கொண்டு வாய் கொப்பளிப்பது புண்களை  ஆற்றும் என டாக்டர் தீபா அருளாளன்   கூறுகிறார்.

நம்முடைய உடல் ஆரோக்கியமானது வாய் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது தான். ஏனெனில் நம் வாயானது உள் உறுப்புகளின் ஆரோக்கியத்தை பிரதிபலிக்க கூடியது. உதாரணமாக உடல் சூடு அதிகமாக இருந்தால் வாயில் புண்கள் வருவது மற்றும் சர்க்கரை நோய் இருந்தால் வாய் வறட்சி மற்றும் ஈறு பிரச்சனைகள் அதிகமாக இருக்கும். இப்படி உள் உறுப்புகளுடன் தொடர்புடையது தான் வாய் பகுதி .

எனவே வாய் பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள தினமும் ஆயில் புல்லிங்  அல்லது வாரத்தில் மூன்று நாட்களாவது ஆயுள் புல்லிங் செய்து அதன் பலன்களை பெறுவோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்