இந்த பழத்தின் விதையில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..?

jamun

நாவல் பழ விதையில் உள்ள நன்மைகள் 

நம்மில் பெரும்பாலானோருக்கு நாவல்பழம் மிகவும் பிடித்தமான ஒன்று. இந்த பழத்தை சாப்பிட்ட பின், அதன் விதையை தூக்கி எரிந்து விடுவது  வழக்கம். ஆனால், நாவல்பழ விதையில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது.

இந்த விதைகளை வீசுவதற்குப் பதிலாக வெயிலில் காய வைக்கலாம். பிறகு அவற்றை அரைத்து தூள் செய்து சுத்தமான பெட்டியில் வைக்கவும். இதை பால் அல்லது சாலட் சேர்த்து சாப்பிடலாம்.

நீரிழிவு 

diabeties
diabeties [Imagesource : representative]

நீரிழிவு நோயாளிகளுக்கு நாவல்பழ விதைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவும். இந்த விதைகளில் உள்ள ஜம்போலின் மற்றும் ஜாம்போசின் ஆகியவை இரத்த சர்க்கரையை அக்கவுரைக்கும் மற்றும் உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கும். இப்பழத்தின் கிளைசெமிக் குறியீடும் குறைவாகவே உள்ளது.

 நோய் எதிர்ப்பு சக்தி 

immunity
immunity [Imagesource : representative]

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இந்த விதைகளில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. இது உடலில் நச்சுத்தன்மையை போக்க உதவுகிறது. இதனால் பல நோய்களில் இருந்து நமது உடலை பாதுகாக்க வேண்டும்.

கல்லீரல் பிரச்சனை

நாவல்பழ விதையில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கல்லீரல் செல்களை பாதுகாக்கிறது. இது தவிர, இந்த விதைகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன, இது கல்லீரல் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

digestive
digestive [imagesource : Representative]

நாவல்பழம் அதன் ஆக்ஸிஜனேற்ற பண்பு காரணமாக, கல்லீரல் ஊக்கியாக செயல்படுகிறது. ஆன்டிஆக்ஸிடெண்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்துக்கு எதிராக போராடுகிறது.

இரத்த அழுத்தம்

blood
blood [Imagesource : Representative]

இரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கு நாவல்பழ விதை மிகவும் நல்ல மருந்தாகும். இந்த விதைத் தூளில் எலாஜிக் அமிலம் என்ற ஆக்ஸிஜனேற்றம் உள்ளது, இது இரத்த அழுத்தத்தின் விரைவான ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்