ஒரு முட்டையும் உருளைக்கிழங்கும் இருந்தா போதும் ..காலை டிபன் ரெடி..
குறைவான நேரத்தில் சத்தான ஸ்பானிஷ் ஆம்லெட் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம்.
சென்னை –குறைவான நேரத்தில் சத்தான ஸ்பானிஷ் ஆம்லெட் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்;
- முட்டை= 5
- உருளைக்கிழங்கு= 200 கிராம்
- பெரிய வெங்காயம்= இரண்டு
- மிளகுத்தூள் =தேவையான அளவு
- குடைமிளகாய் =சிறிதளவு
- எண்ணெய் =6 ஸ்பூன்
செய்முறை;
முதலில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை தோல் நீக்கி சிறிது சிறிதாக நீள்வாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும் .பிறகு ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூளை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இப்போது ஒரு பாத்திரத்தில் 6 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம், உருளைக்கிழங்கை மற்றும் குடை மிளகாய் சேர்த்து 80 சதவிகிதம் எண்ணெயிலேயே வேக வைத்துக் கொள்ளுங்கள்.[முட்டைகோஸ் ,காரட் போன்ற உங்களுக்கு பிடித்த காய்கறிகளும் சேர்த்து கொள்ளலாம்] .
பிறகு அவற்றை முட்டையில் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் . இப்போது தோசை தவாவை சூடாக்கி சிறிது எண்ணெய் தடவி அதில் இந்த கலவையை சேர்த்து ஐந்து நிமிடம் மிதமான தீயில் வேக வைத்துக் கொள்ளுங்கள் .பிறகு அதை திருப்பி போட்டுக் ஐந்து நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான ஸ்பானிஷ் ஆம்லெட் தயாராகிவிடும்.