துளசி இலையின் அசத்தலான நன்மைகள்..!

துளசி இலையின் பல்வேறு ஆயுர்வேத நன்மைகள் பற்றி மருத்துவர் மைதிலி தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டதை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

tulsi (1) (1) (1)

துளசி இலையின் பல்வேறு ஆயுர்வேத நன்மைகள் பற்றி மருத்துவர் மைதிலி தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டதை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

சென்னை : நமது உடலை பேணி பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இயற்கை பல்வேறு மூலிகைகளை நமக்கு அளித்துள்ளது. ஒவ்வொரு மூலிகைகளுக்கும் ஒவ்வொரு தனி சிறப்புகளும், ஆயுர்வேத பலன்களும் உள்ளன. செடி வளர்ப்பில் ஈடுபடும் பலரது வீட்டில் வளர்க்கப்படும் ஒரு பொதுவான மூலிகை என்றால் அது துளசி தான். இதில் உள்ள மருத்துவ குணங்கள் பல நோய்களை தீர்க்க வல்லது. அதனால் தான் துளசி நீரை கோவிலில் தீர்த்தமாக தற்போதும் வழங்கப்பட்டு வருகிறது.

துளசியை பயன்படுத்தும் முறை :

பல் ஆரோக்கியம் : துளசி இலைகளை பறித்து அதனை நன்கு கழுவி வெயிலில் உலர வைத்து, பொடியாக்கி தினமும் சிறிதளவு, கடுகு எண்ணெய் கலந்து பல் துலக்கி வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

வாய்ப்புண் : ஒரு கைப்பிடி துளசி இலைகளை இரண்டு கிளாஸ் தண்ணீரில் சேர்த்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள், கல் உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அந்த தண்ணீர் கொன்டு வாய் கொப்பளித்து வர உதட்டுப்புண், வாய்ப்புண் போன்றவை குணமாகும். மீண்டும் வாய்ப்புண் வருவதும் கட்டுப்படுத்தப்படும்.

வியர்வை துர்நாற்றம் : துளசி இலைகளை இரவு முழுவதும் ஒரு பக்கெட் தண்ணீரில் ஊற வைத்து, அதனை காலையில் பயன்படுத்தி குளித்து வந்தால் உடல் வியர்வை துர்நாற்றம் படிப்படியாக நீங்கும்.

சளி தொல்லை : துளசி இலை ஆண்டிவைரஸ் மற்றும் ஆண்டி பாக்டீரியல் போன்ற பண்புகளை கொண்டுள்ளதால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பருவகால நோய் தொற்றுகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

சளி, காய்ச்சல் குணமாக ஒரு கைப்பிடி துளசியை ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்த்து அதனுடன் சுக்குபொடி அரை ஸ்பூன், மஞ்சள் தூள் அரை ஸ்பூன், மிளகு இரண்டு சிட்டிகை சேர்த்து கொதிக்க வைத்து காலை உணவுக்கு முன் 25 மில்லி இரவு உணவுக்கு முன் 25 மில்லி என மூன்று நாட்கள் எடுத்துக் கொண்டு வந்தால் நான்கு நாட்களில் காய்ச்சல், சளி குறைவதை காணலாம். அதோடு மட்டுமல்லாமல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும்.

துளசி இலைகள் தூக்கமின்மை பிரச்சனையையும் குணப்படுத்தும். மேலும் இதிலுள்ள யுஜினால் என்ற வேதிப்பொருள் அஜீரண கோளாறுகள் வராமல் பாதுகாப்பதோடு உடலில் PH அளவை சமநிலையோடு வைத்துக் கொள்கிறது.

தலைவலி :

உடல் உஷ்ணம் காரணமாக ஏற்படும் தலைவலிக்கு துளசி இலைகளை அரைத்து நெற்றியில் பற்று போல தேய்ந்து, 30 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும். இவ்வாறு தொடர்ந்து மூன்று நாள்கள் செய்து வர வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் உயர் ரத்த அழுத்தம் குறைக்க துளசி சிறந்த மருந்து என்றும் டாக்டர் மைதிலி கூறுகின்றார். மேலும், துளசி ரத்த ஓட்டத்தை சீராக்கி தூய்மைப்படுத்துகிறது.

துளசி இலைகளை இரவே ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து ஊற வைத்து அதை காலையில் பருகிவர நீரிழிவு நோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இவ்வாறு வாரத்திற்கு ஒரு நாள் செய்தாலே போதும். ஆகவே எளிதில் கிடைக்கக்கூடிய அதிக மருத்துவ குணம் கொண்ட துளசி இலைகளை மருத்துவர்கள் அறிவுரையோடு முறையாக பயன்படுத்தி நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்கிறார் மருத்துவர் மைதிலி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்