வேப்பிலையின் அசர வைக்கும் நன்மைகள்..! உச்சந்தலை முதல் உடல் ஆரோக்கியம் வரை..

இயற்கையாக கிடைக்கும் கிருமி நாசினியான வேப்பிலையின் மருத்துவ குணங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

neem leaf (1)

இயற்கையாக கிடைக்கும் கிருமி நாசினியான வேப்பிலையின் மருத்துவ குணங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

சென்னை :வேப்ப மரத்தில் பல ஆரோக்கிய நன்மைகளும் பயன்களும் இருப்பதால் கிராமங்களில் இன்றும் தெய்வமாக கருதி வழிபடப்படுகிறது. வேப்பமரத்தில் வெளியேறும் காற்றிற்கு நுண்கிருமிகளை அளிக்கும் தன்மை உள்ளது. மேலும் வேப்பமரம் ஒரு வீட்டில் இருப்பது அந்த இடத்தில் 10 டிகிரி வெப்பநிலையை குறைக்கும் தன்மையை கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

வேப்ப இலையின் ஆரோக்கிய நன்மைகள் :

வேப்ப இலை புற்றுநோய்  முதல் உச்சந்தலை பொடுகு வரை பல நோய்கள் குணமாகின்றது. வேப்பம்பூ ,வேப்பம் இலையில் மட்டுமில்லாமல் வேப்ப மரத்தில் பட்டை,பூ ,பழம் என அனைத்துமே மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

வேப்பம்பூவை ரசம் வைத்து சாப்பிடுவதன் மூலம் செரிமான கோளாறு நீங்குவதோடு குடல் புழுக்கள் வெளியேறுகிறது .மேலும் வயிற்று புண்களையும் ஆற்றுகிறது . கோடை காலத்தில் வெப்பத்தால் ஏற்படக்கூடிய அம்மை நோய்க்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வேப்பிலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து அம்மை உள்ள இடத்தில் பூசி வர அரிப்பு ,எரிச்சல் ,அம்மை தழும்பு போன்றவை மறைகிறது.

வேப்பிலை  கொழுந்தை  அரைத்து 15 எம்எல் வீதம் காலையில் வெறும் வயிற்றில் வளரும்  குழந்தைகளுக்கு கொடுத்து வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு குடல் புழுக்கள் வெளியேறும் , ரத்தமும் தூய்மையாக்கப்படுகிறது.

விஷ பூச்சி,பாம்பு  கடி ஏற்பட்டால் உடனே வேப்பிலைகளை சாப்பிட்டு வர  விஷம் உடல் முழுவதும் பரவுவது தடுக்கப்படுகிறது. பிறகு முறையான மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

வேப்பிலையில் விட்டமின் ஈ மற்றும் பேட்டி ஆசிட்   இருப்பதால் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்கிறது.முகப்பரு மற்றும் முகப்பருவால் ஏற்பட்ட தழும்பு மறைய வேப்பிலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 30 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளபளப்பாக மாறும்.தோலில்  ஏற்படும் வியர்க்குரு ,அரிப்பு ,படை போன்ற தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு வேப்பிலை அரைத்து பூசி வர விரைவில் குணமடையும்.

மேலும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழித்து புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது.

தலையில் உள்ள பொடுகு நீங்கவேப்பிலைகளை கொதிக்க வைத்து ஆற வைத்து அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்து வரவும் அல்லது வேப்ப  எண்ணையை தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்து வர பொடுகு ,பூச்சி வெட்டு நீங்கும்

வேப்ப இலைகளை பச்சையாக மென்று சாப்பிட்டு வர பல் ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்குவதோடு பல் சொத்தை வாய் துர்நாற்றம் போன்றவை ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

தினமும் வேப்பிலையை தேநீரக்கி குடித்து வர ரத்த  சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வைக்கப்படுகிறது. இதில் ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி பண்புகள் உள்ளதால் வீக்கம் மற்றும் வலியை குறைக்க கூடியதாகவும் உள்ளது. வேப்ப இலைகள் ஒரு கைப்பிடி ,முடக்கத்தான் கீரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து மூட்டுகளைச் சுற்றி பற்று போல் போட்டு வர மூட்டு வலி குணமாகும் என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறு வேப்பிலை   கிருமி நாசினியாக இருப்பதோடு பல நோய்களுக்கு மருந்தாகவும் உள்ளது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்