அம்மாவின் அன்பிற்கு முன் அனைத்துமே அடிபணிந்து தானே ஆக வேண்டும்!

Default Image

தாயின் அன்புக்கு ஈடாய் இந்த உலகில், வேறெந்த அன்பும் இல்லை. 

பூமி நம்மை தங்குவதற்கு முன்னே, நம்மை கருவில் சுமந்து பெற்றேடுத்த அன்னைக்கு இந்த உலகில் நாம் எதை கொடுத்தாலும் ஈடாகாது. அன்பு என்ற வார்த்தைக்கு முழுமையான அர்த்தம் அனைத்தும் மறைந்திருக்கும் ஒரு இடம் ‘அம்மா’ தான். 

இந்த உலகில் நாம் எவ்வளவு அன்பான உறவுகளை தேடி சென்றாலும், நமது இதயத்தில் நம்மை கருவில் சுமந்த அம்மாவின் அன்புக்காக ஏங்கும் ஏக்கம் இருந்துக் கொண்டே தான் இருக்கும். எந்த ஒரு அன்பாலும் அந்த ஏக்கத்தை முழுமையாக தீர்க்க முடியாது. 

அன்பு, அரவணைப்பு, பாசம், அக்கறை, கண்டிப்பு இவை அனைத்தும் ஒரே இடத்தில கிடைக்குமென்றால், அந்த இடம் அம்மாவாக தான் இருக்க முடியும். பிறக்கும் போது நமது அழுகை சத்தம் கேட்டு சிரித்த அன்னை, நாம் வளரும் போது நம் கண்ணில் ஒரு துளி கண்ணீர் வரமால் பார்த்துக் கொள்வாள். 

இந்த உலகில் நாம் யாருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்க மறந்தாலும், உன்னை பெற்ற தாய்க்கு நீ கொடுக்க வேண்டிய கனத்தை கண்டிப்பாக கொடுத்தே ஆக வேண்டும். உன்னை பெற்றவர்கள் நீ மதிக்காத போது, கடவுளிடம் சென்று பயபக்தியாய் எவ்வளவு வேண்டினாலும், அதற்கு பலன் இல்லை. 

‘அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்’ என்ற வார்த்தைக்கு ஏற்ப முதலில் நாம் கண்ணில் கண்ட தெய்வமாக மதிக்க வேண்டியது பெற்றோரை தான். பெற்றோரை மதிக்க வேண்டிய இடத்தில்,நீ மிதிப்பாயானால், நாம் மரியாதையை எதிர்பார்த்து நிற்கும் இடத்திலும், நாமும் மிதிக்கப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். எனவே, தாய், தந்தையை கணம் பண்ண வேண்டிய காரியங்களில், கடமை தவறக் கூடாது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்