தயிர் வடை -மெது மெதுவென தயிர் வடை செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம்.
முதலில் உளுந்தை கழுவி 1மணி ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு தயிரை தயாராக செய்து வைத்துக் கொள்ளவும். தயிருடன் 200ml காய்ச்சி ஆற வைத்த பாலை ஊற்றி கலந்து வைத்துக் கொள்ளவும். இவ்வாறு பால் சேர்க்கும் பொழுது தயிர் வடை நீண்ட நேரம் புளிக்காமல் இருக்கும்.
இப்பொழுது ஊற வைத்துள்ள உளுந்தை பந்து போல அரைத்து எடுத்துக் கொள்ளவும். கையில் எடுத்தால் பந்து போல உருட்ட வரவேண்டும். கையில் மாவு ஒட்டக்கூடாது இதுதான் சரியான பதம் ஆகும். அரைத்த மாவில் இரண்டு ஸ்பூன் அரிசி மாவு, இஞ்சி ,பச்சை மிளகாய், கொத்தமல்லி இலைகள், சீரகம், மிளகு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிறகு அடுப்பில் வடை பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய வைத்துக் கொள்ளவும் எண்ணெய் காய்ந்ததும் மாவை சிறிது சிறிதாக தட்டி பொரித்து எடுக்கவும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் இரண்டு வரமிளகாய், சிறிது கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும் .இந்த தாளிப்பு ஆறிய உடன் தயிரில் கலந்து கொள்ளவும்.
பிறகு ஒரு அகலமான பாத்திரத்தில் செய்து வைத்துள்ள உளுந்த வடைகளை சேர்த்து அதற்கு மேல் தயிரையும் ஊற்றி 20 நிமிடங்கள் ஊற வைத்து விட வேண்டும். இப்போது சுவையான மிருதுவான தயிர்வடை ரெடி.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…