ஆஹா.! தயிர் வடை என்றால் இப்படித்தான் இருக்கணும்.!

thayir vadai

தயிர் வடை -மெது மெதுவென  தயிர் வடை செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள்:

  • உளுந்து =300 கிராம்
  • தயிர் =அரை லிட்டர்
  • பால் =200 ml
  • சீரகம் =1 ஸ்பூன்
  • மிளகு =1 ஸ்பூன்
  • பச்சை மிளகாய் =3
  • பெரிய வெங்காயம் =2
  • காய்ந்த மிளகாய் =2
  • கடுகு உளுந்தது =1 ஸ்பூன்
  • கருவேப்பிலை கொத்தமல்லி =சிறிதளவு
  • பெருங்காயம் =அரைஸ்பூன்
  • இஞ்சி =1 துண்டு
  • அரிசி மாவு =2 ஸ்பூன்
  • எண்ணெய் =தேவையான அளவு

curd (1)

செய்முறை:

முதலில் உளுந்தை கழுவி 1மணி  ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு தயிரை தயாராக  செய்து வைத்துக் கொள்ளவும். தயிருடன் 200ml காய்ச்சி ஆற வைத்த பாலை ஊற்றி கலந்து வைத்துக் கொள்ளவும். இவ்வாறு பால் சேர்க்கும் பொழுது தயிர் வடை நீண்ட நேரம் புளிக்காமல் இருக்கும்.

ulunthu (1)

இப்பொழுது ஊற வைத்துள்ள உளுந்தை பந்து போல அரைத்து எடுத்துக் கொள்ளவும். கையில் எடுத்தால் பந்து போல உருட்ட வரவேண்டும். கையில் மாவு  ஒட்டக்கூடாது  இதுதான் சரியான பதம் ஆகும். அரைத்த மாவில் இரண்டு ஸ்பூன் அரிசி மாவு, இஞ்சி ,பச்சை மிளகாய், கொத்தமல்லி  இலைகள், சீரகம், மிளகு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.

uluntha vadai

பிறகு அடுப்பில் வடை பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய வைத்துக் கொள்ளவும் எண்ணெய்  காய்ந்ததும் மாவை சிறிது சிறிதாக தட்டி பொரித்து எடுக்கவும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில்  இரண்டு ஸ்பூன் எண்ணெய்  ஊற்றி  கடுகு மற்றும் இரண்டு வரமிளகாய், சிறிது கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும் .இந்த தாளிப்பு ஆறிய உடன் தயிரில் கலந்து கொள்ளவும்.

vadai with curd

பிறகு ஒரு அகலமான பாத்திரத்தில் செய்து வைத்துள்ள உளுந்த வடைகளை சேர்த்து அதற்கு மேல் தயிரையும் ஊற்றி 20 நிமிடங்கள் ஊற வைத்து விட வேண்டும். இப்போது சுவையான மிருதுவான தயிர்வடை ரெடி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Vijay -Parandur -Airport
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay