Brinjal gravy-பிரியாணிக்கு ஏற்ற கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என்று இப்பதிவில் பார்ப்போம்.
முதலில் கத்திரிக்காயை முட்டை கத்திரிக்காய்க்கு நறுக்குவது போல் காம்புகளை மட்டும் நீக்கி கீறி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கத்தரிக்காயை 50 சதவீதம் எண்ணெயிலே வேக வைத்துக் கொள்ளவும் .
பிறகு வேர்க்கடலை, வெள்ளை எள்ளு, வெந்தயம் ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும் .இப்போது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், மிளகு, கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து வதங்கியதும் மிளகாய்த்தூள், மல்லித்தூள்,மஞ்சள் தூள் ஆகியவற்றையும் சேர்த்து கிளறி கத்தரிக்காயையும் சேர்த்து புளிக்கரைசலையும் ஊற்றி கிளறிவிட்டு பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.
இப்போது எண்ணெய் பிரிந்து வந்திருக்கும் ,இந்த நேரத்தில் அரைத்து வைத்துள்ள வேர்க்கடலையை அதில் சேர்த்து கிளறி, சிறிதளவு தண்ணீர் ஊற்றி இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து, வெல்லம் சேர்த்து இறக்கினால் பிரியாணிக்கு ஏற்ற கத்திரிக்காய் கிரேவி தயார்.
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…