பிரட் சில்லி -பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் அலுவலகம் செல்லும் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த காலை உணவு என்றால் பிரட்டு தான் ,ஏனென்றால் இது சாப்பிடுவதற்கு சுலபமாகவும் சுவையாகவும் இருப்பதால் அதிக பேர் விரும்புகிறார்கள். பிரட்டை வைத்து பிரட் ரோஸ்ட், பிரட் ரோல் போன்றவற்றை செய்து ருசித்திருப்போம். அந்த வகையில்இன்று பிரட்டை வைத்து பிரட் சில்லி செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருள்கள்:
செய்முறை:
முதலில் பிரட்டை சிறு சிறு துண்டுகளாகி சிறிதளவு எண்ணெயில் பொரித்து எடுத்து வைக்கவும். அதே பாத்திரத்தில் ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் ,இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும், பிறகு வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும், அப்போதுதான் சுவையாக இருக்கும்.
பிறகு மிளகாய்த்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் ஆகியவற்றையும் சேர்த்து கிளறி தக்காளி மற்றும் உப்பையும் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறி விடவும். அதன் பிறகு குடைமிளகாயை சேர்த்து கிளறி பிரட்டையும் சேர்த்து மசாலா படும்படி கலந்து விடவும். ஐந்து நிமிடம் கழித்து கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான ரெட் சில்லி ரெடி.
காலை நேரங்களில் இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். வேலையும் சுலபமாக முடியும்.
டெல்லி : வரும் பிப்ரவரி மாதம் டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில்…
சென்னை : எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி பன்னாட்டுக் கருத்தரங்கு…
மும்பை : ஷங்கர் இயக்கத்தில் அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம்…
சென்னை : தமிழ்நாட்டில் வரும் 10, 11 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 24வது மாநில மாநாடு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் – சென்னை தேசிய…