லைஃப்ஸ்டைல்

ஆஹா! ஆப்பிள்ல அல்வா செய்யலாமா? அட இது ரொம்ப புதுசா இருக்கே!

Published by
K Palaniammal

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை அணுகத் தேவையில்லை என்பது நாம் அனைவரும் அறிந்து கொண்ட ஒன்று. ஆப்பிளை நாம் ஜூஸாகவும் முழு பழமாகவும் அல்லது வேகவைத்தும் சாப்பிட்டு பழகியிருப்போம். ஆனால் குழந்தைகளுக்கு இதே வகையில் கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள். நாம் ஒரு புதுமையான முறையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் நாம் இன்று ஆப்பிளை வைத்து அசத்தலான அல்வா எப்படி செய்வது என்பதை  பார்ப்போம்.

தேவையான பொருள்கள் :

ஆப்பிள்- 2
சோள மாவு – 3ஸ்பூன்
நெய் – 5ஸ்பூன்
முந்திரி -10
சர்க்கரை -1/2 கப்

செய்முறை:

ஆப்பிளை தோல் நீக்கி அல்லது சுடு தண்ணீரில் கழுவி அரைத்து கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அந்த நெய்யிலே அரைத்த ஆப்பிளை ஊற்றி மிதமான தீயில் தண்ணீர் வற்றும் வரை கிளறவும்.

ஒரு கப்பில் சோளமாவை கரைத்து அதிலே ஊற்றி கைவிடாமல் ஒரு ஐந்து நிமிடம் கிளறவும். பின்பு அரை கப் சர்க்கரையும் சேர்த்து அல்வா பதம் வரும் வரை கிளறவும். பெண் அதிலே முந்திரியை தூவி இறக்கவும். இப்போது அட்டகாசமான தித்திப்பான ஆப்பிள் அல்வா ரெடி.

சத்துக்கள்:

விட்டமின் ஏ , விட்டமின் சி , விட்டமின் ஈ , விட்டமின் பி1,பி2, நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து சோடியம் பொட்டாசியம், பாஸ்பேட்,பெக்டின், சர்க்கரை மற்றும் மேலே கியூரிக் அமிலம், மாலிக் அமிலம்,மாவுச்சத்து போன்றவை நிறைந்து காணப்படுகிறது.
இதில் உள்ள இரும்புச் சத்தை உடல் எளிதில் கிரகித்துக் கொள்ளும்.

பயன்கள்:

  • ஆப்பிளில் பெட்டி எனும் கரையும் நாச்சத்து அதிகம் உள்ளது. இது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்க உதவுகிறது.
  • ஆற்றில் உள்ள கியூயர்சிடின் என்னும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் மூளை செல்கள் அழியாமல் பாதுகாத்து மேலும் நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது.
  • கால்சியத்தை உடலில் சேமித்து வைக்க செய்கிறது. அதிக ரத்த போக்கை தடுக்கிறது.
  • சோடியம் அதிக அளவில் உடலில் சேராமல் பாதுகாக்கிறது.
  • மூளைக்கு நல்ல நினைவாற்றலை தருகிறது. குடலில் உள்ள கிருமிகளை அழிக்கிறது.
  • குழந்தைகளுக்கு வயிறு கட்டி மலம் கழிக்க சிரமமாக இருந்தால் ஆப்பிளை கொடுத்தால் சரியாகிவிடும்.
  • இதய நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவு ஆகிறது. மேலும் நல்ல தூக்கத்தையும் வரவழைக்கிறது.
  • இதில் உள்ள மாலிக் அமிலம் பித்தக்கல் உருவாகாமல் தடுக்கிறது.

பக்க விளைவுகள் :

ஆப்பிளை நாம் அதிக அளவு எடுத்துக் கொள்ளும் போது அதில் உள்ள கார்பன் டை ஆக்சைடு கொழுப்பாக மாறுகிறது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது. மேலும் உடல் எடையையும் அதிகரிக்கும். நீரிழிவு நோயாளிகள் மிகக் குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் நிக்கல் போன்ற மெழுகு பூசப்படுவதால் புற்றுநோயை உருவாக்கும். ஆப்பிளை நாம் பயன்படுத்தும் போது தோலை சீவி விட்டு பயன்படுத்த வேண்டும். ஆப்பிள் விதைகளில் சைனைட் போன்ற நச்சு இருப்பதால் விதைகளை தவிர்ப்பது நல்லது. ஆகவே நாம் அளவோடு பயன்படுத்தி ஆரோக்கியத்தை பெறுவோம்.

Published by
K Palaniammal

Recent Posts

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

1 hour ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…

2 hours ago

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

3 hours ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

4 hours ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

4 hours ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

5 hours ago